அடக்குமுறை
பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு வெளிப்படையாக எதிர்ப்புக்காட்டும்
ராஜத் துவேஷப் பிரச்சாரத்தில் இந்திய மொழிப்பத்திரிகைகளே பெரிதும்
ஆர்வம் காட்டின. இதன் காரணமாக, அச்சகச் சட்டம் (Press act) என்ற
பெயரில், இந்திய வைஸ்ராய் அடக்குமுறைச் சட்டமொன்றைக் கொண்டு
வந்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்து வருமாறு:
"சுதேச மொழிப் பத்திரிகைகள் இந்திய மக்களுக்கு அறிவைப்
புகட்டுவதாகச் சொல்லிக் கொண்டு, அவர்கள் உள்ளங்களில் மிகவும்
அகம்பாவமான ராஜத்துவேஷத்தைப் புகுத்தி வருகின்றன."
மீண்டும் 1870ல் அச்சகச் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வந்து,
தேசபக்தர்கள் நடத்திய நாட்டு மொழிப் பத்திரிகைகளுக்கு அன்னிய அரசு
தொல்லை கொடுத்தது. இந்தச் சட்டங்களுக்கு இந்தியத் தேசபக்தர்கள்
பணிந்து கொடுத்திருந்தால் பத்திரிகை உலகில் பிரதேச மொழிகள்
வளர்ச்சியற்றுப் போயிருக்கும். ஆனால், நாட்டுப்பற்றும் தாய்மொழிப்
பற்றுமுடைய தேசியவாதிகள், அடக்குமுறைக்கு அஞ்சாது, நெஞ்சுறுதியுடன்
விடுதலைப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தினர்.
1878ல் இந்திய மொழிப் பத்திரிகைச் சட்டம் (Vernacular Act)
என்பதாக, பிரதேச மொழிகளை ஒடுக்க பிரிட்டிஷ் ஆதிக்கம் புதிதாக
ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப்
பிரதேசமொழிப் பத்திரிகைகளை ஒடுக்கப் பிறந்த சட்டங்களால்,
பத்திரிகைகளின் நடையிலே வேகமும் விறுவிறுப்பும் தோன்றின. இதனால், தமிழ்மொழி மறுமலர்ச்சியடைந்தது. ஒன்றிரு பத்திரிகைகள் மீது
ஈவிரக்கமின்றி அடக்குமுறையை அமுல் நடத்தியது அரசு. இதனால்,
பிரிட்டிஷ் ஆதிக்கம் தனக்குத்தானே குழிதோண்டிக் கொண்டு
வருவதை அறிந்து, 1881ல், அப்போது வைசிராயாக