யந்திரத்தில் பிரதிகள் எடுத்து மக்களிடையே விற்பனை செய்யப்பட்டது. அந்நாளில் இது ஒரு போர் முறையாக இருந்தது, இதுபற்றி, திரு.வி.க.
தரும் தகவல் வருமாறு: "ஏப்ரல் ஏழாம் நாள் 'சத்தியாக்கிரகி' அரசாங்கப் பதிவு பெறாமல்
மகாத்மா காந்தியை ஆசிரியராகக் கொண்டு பம்பாயில் வெளிவந்தது.
சென்னை 'சத்தியாக்கிரகி' ஏப்ரல் பதினான்காம் நாள் வெளியாயிற்று.
(ஆசிரியன்மார்: டி.வி.வேங்கடராம ஐயர், ஜார்ஜ் ஜோஸப், கொண்டா
வேங்கடசுப்பையா, வெளியிடுவோர்: எஸ். கஸ்தூரிரங்க ஐயங்கார்)
'சத்தியாக்கிரகி' கையாலும் சைக்லோஸ்டைலிலும் எழுதப் பட்டமையால்,
அஃது அச்சகச் சட்டத்தின் கீழ் வாராதென்று அரசாங்கச் சார்பில்
பேசப்பட்டதென்று தெரியவந்தது. "சத்தியாக்கிரகி” யின் ஆசிரியன்மாரும்
வெளியிட்டவரும் கைது செய்யப்பட்டாரில்லை."1
சதானந்தரின் சாதனை!
ஆங்கிலமொழி பத்திரிகை யுலகிலும் தமிழர் சிலர் முன்னணியில்
நின்றனர். தீவிர தேசபக்தரான மதுரை ஜார்ஜ் ஜோஸப் அவர்கள்,
காந்தியடிகளின் 'யங் இந்தியா' வாரப்பத்திரிகையிலும் பண்டித மோதிலால்
நேரு நடத்திய 'இண்டிபெண்டண்ட்' பத்திரிகையிலும் ஆசிரியராக சில
ஆண்டுகள் பணிபுரிந்தார். அடிகளாரின் 'அரிஜன்' வார இதழின்
ஆசிரியராக ஆர்.வி.சாஸ்திரி அவர்கள் தொண்டாற்றினார். அதனால்,
'அரிஜன் சாஸ்திரி' என்றே அவர் அழைக்கப்பட்டார். திரு.கே. நடராசன்
என்பார், ஆங்கில பத்திரிகைத் துறைக்கே தன்னை அர்ப்பணித்துக்
கொண்டவராவார். இவர் சரியாக 50 ஆண்டுக் காலம் ஆங்கிலப் பத்திரிகை
யின் ஆசிரியராக இருந்தார்.
திரு.சதானந்தம் என்பவர், 'ப்ரீபிரஸ் ஜர்னல்' என்ற ஆங்கிலப்
பத்திரிகையை வடபுலத்திலிருந்துகொண்டு வெளியிட்டார். அந்நாளில்,
'ராய்ட்டர்' என்ற நிறுவனம் பத்திரிகைகளுக்கு ஆங்கில மொழியில்
செய்திகளைத் திரட்டி வழங்கிவந்தது. அது பிரிட்டிஷ் அரசின்
ஆதிக்கத்தில் இருந்ததால், விடுதலைப் போருக்கு ஆதரவாக
1. திரு.வி.க.வா. குறிப்புகள்; பக்.308.