பக்கம் எண் :

262விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

இருக்கவில்லை.   எதிரான போக்கிலும் செயல்பட்டது. அதனைத் தகர்க்கும்
பொருட்டு, 'ப்ரீ பிரஸ்'என்ற பெயரில் தேசிய எழுச்சிக்கு ஆதரவான செய்தி
நிறுவனமொன்றை  மிகவும்  துணிவுடன்  தொடங்கிய  பெருமை  தமிழரான
திரு.சதானந்தம் அவர்களுக்கே உரிய தாகும்.

     தலைவர்  ராஜாஜி  அவர்கள்,  காந்தியடிகள் சிறைப்பட்டிருந்த ஒரு
சமயத்தில் 'யங் இந்தியா'வின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

      'அமிர்த பஜார்’,  'லீடர்,' ஆகிய வடபுலத்து ஆங்கில நாளேடுகளில்
தமிழர்  பலர் ஆசிரியர்களாக  இருந்துள்ளனர்.  இந்தியாவிலுள்ள உலகப்
புகழ்பெற்ற  ஒரு  சில  ஆங்கில  நாளேடுகளில்  தமிழரால் நடத்தப்படும்
'இந்து'வும் ஒன்றாகும்.

     நாடகக்   குழுவினை   நடத்திய    நாடகாசிரியர்களிலே   நாளேடு 
நடத்தியவர்      ஒருவர்       உண்டென்றால்,    அவர்    சதாவதானி 
தெ.பொ.கிருஷ்ணசாமிப்   பாவலரேயாவார்.   இது, நாடக உலகுக்கு அவர்
தேடி வைத்துள்ள தனிப் பெருமையாகும்.

பிரதேசப் பற்று!

      நாட்டுப் பற்றையும் தாய்மொழிப்பற்றையும் பிணைத்துச் செயலாற்றும்
முயற்சி திலகர் சகாப்தத்தில் தோன்றி, காந்தி சகாப்தத்தில் தீவிரமடைந்ததன்
விளைவாக, பிரதேசத்தின் பெயராலும்  பிரதேசமொழியின் பெயராலும் தீவிர
தேசியவாதிகளாலேயே     நாளிதழ்கள்    நடத்தப்பெற்றன.    அவற்றின்
பெயர்களும் ஆசிரியர் பெயர்களும் வருமாறு:

    பத்திரிகை          ஆசிரியர்
    'தமிழ்நாடு'             டாக்டர்.பி.வரதராசுலு
    'தென்னாடு'            டி.என்.நடராசப்பிள்ளை
    'கேரள கௌமதி'       -
    'மலையாள ராஜ்யம்     -
    'கேரளன்'             -
    'கர்னாடக் வைபவ்'      எச்.ஆர்.மொகாரே
    'ஆந்திர பத்திரிகா'      நாகேஸ்வர ராவ்
    'சம்யுக்த கர்னாடக்     -
    'மராட்டா'             பால கங்காதர திலகர்
    'வங்காளி'             சுரேந்திரநாத் பானர்ஜி