பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 263

'குஜராத்தி'             -
'குஜராத்தி பஞ்ச்'        -
'ராஜஸ்தான் சமாச்சார்'   -
'பஞ்சாபி'              -
'காஷ்மீர் தர்பன்'       சர்.தேஜ்பகதூர் சாப்ரூ

     இந்திய   மொழிகளிலே  பத்திரிகை   நடத்திய  பெருந்தலைவர்களில்
சிலருடைய பெயர்களும், பத்திரிகைகள் பெயர்களும் வருமாறு:

ஆசிரியர்           பத்திரிகை          மொழி
திலகர்                'கேசரி'                மராத்தி
கோகலே              'சுதாரகை'             மராத்தி
காந்திஜி               'நவஜீவன்'            குஜராத்தி
ராஜாஜி                'விமோசனம்'           தமிழ்
டி.பிரகாசம்             'சுயராஜ்யா'            தமிழ்
ஜி.சுப்பிரமணியம் ஐயர்   'சுதேசமித்திரன்'         தமிழ்
அரவிந்தர்              'தர்மா'               வங்கம்
சி.ஆர்.தாஸ்            'நாராயணா'            வங்கம்
லாலா லஜபதி           'வந்தேமாதரம்'         உருது
சுவாமி சிரத்தானந்தர்     'தேஜ்'                உருது
மதன்மோகன் மாளவியா  'அப்யுதயா'            இந்தி

     தமிழகத்திலே,     எண்ணிறந்த     தேசியவாதிகள்    மாத - வாரப்
பத்திரிகைகளின்   ஆசிரியர்களாக  இருந்து,  தமிழ் வளர்ச்சிக்காகவும் தாய்
நாட்டின்  விடுதலைக்காகவும்  பணி புரிந்துள்ளனர். அவர்களில் சிலருடைய
பெயர்களும்  அவர்களை   ஆசிரியர்களாகக்   கொண்ட  பத்திரிகைகளின்
பெயர்களும் வருமாறு:

      பரலி.சு.நெல்லையப்பர்  -   'லோகோபகாரி',  ராய.  சொக்கலிங்கம்-
'ஊழியன்',  சொ.முருகப்பா -'குமரன்’, ப.ஜீவானந்தம்-'ஜனசக்தி', கோவிந்தன
-'சக்தி', நாரண. துரைக்கண்ணன் - 'பிரசண்ட விகடன்', ஏ.கே.செட்டியார் -
'குமரிமலர்',  தேவாரம்  நாராயணசாமி  செட்டியார்  - 'பாரதி', வெ.சாமிநாத
சர்மா -   'ஜோதி',   ரா.நாராயணன்   -  'இந்துஸ்தான்',  ந.சோமயாசுலு -
'இளந்தமிழன்', இராமலிங்கம் ('ராலி') - 'அனுமான்', ந.சுப்பிரமணியம் - 'மதுர
மித்திரன்', சீனிவாசன் - 'மணிக்கொடி', பெர்னாண்டோ -  'தமிழ் மணி'.