பக்கம் எண் :

264விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

தமிழில் விஞ்ஞான ஏடு

     விஞ்ஞானக்  கலைச்  சொற்களைத்  தமிழில் படைக்கும் முயற்சிக்குத்
துணைபுரிய  சேலத்தில்  ஒரு  சங்கம்  அமைக்கப்பட்டு,  அதன்  சார்பில்
ஒரு  மாதப்  பத்திரிகையும்  நடத்தப்  பெற்றது.  அதன்  முதல் இதழுக்கு
பாரதியார் தமது 'இந்தியா'வில் எழுதிய மதிப்புரை வருமாறு:1

     "சேலத்தில்    வக்கீல்  ஸ்ரீ.  சக்கரவர்த்தி    ராஜகோபாலாசார்யரும்,
ஸ்ரீ. வெங்கட   சுப்பையரும்    சேர்ந்து     ஒரு  மாதப்  பத்திரிகையைத்
தொடங்கியிருக்கிறார்கள்.  இந்தப்   பத்திரிகையின்  பெயர்  'தமிழ் சாஸ்த்ர
- பரிபாஷைச்   சங்கத்தாரின்  பத்திரிகை.  மேற்கண்ட   பெயருடன்  ஒரு
சங்கம் சேலத்தில் ஏற்பட்டிருக்கிறது.”

     "தமிழில்  சாஸ்த்ர  பரிபாஷை மாஸப்  பத்திரிகை  என்ற சேலத்துப்
பத்திரிகையின்  முதலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆரம்பத்திலே  தமிழில்  எழுதாமல்  தமிழருக்கு வேண்டிய இக்காரியத்தை
இங்கிலீஷ்     பாஷையிலே     தொடங்கும்படி     நேரிட்டதற்கு    ஸ்ரீ.
ராஜகோபாலாசார்யார் சொல்லும் முகாந்திரங்கள் எனக்கு  முழு நியாயமாகத்
தோன்றவில்லை. ஆனால், கூடிய சீக்கிரத்தில் தமிழ்ப் பகுதியொன்று அந்தப்
பத்திரிகையில்     சேருமென்று    தெரிகிறது.   அநேகமாக,   இரண்டாம்
ஸஞ்சிகையிலேயே    தமிழ்ப்பகுதி    சேருமென்று    கேள்விப்படுகிறேன்.
அங்ஙனம்,  தமிழ்  சேர்ந்து  நடக்கும்  சாஸ்த்ரப்  பத்திரிகையினால், தமிழ்
நாட்டாருக்கு மிகப் பெரிய பயன் விளையும் மென்பதில் சந்தேகமில்லை.”

      விடுதலைப்   போராட்ட   காலத்தில்   தேசியப்    பத்திரிகைகளில்
துணையாசிரியர்களாக     இருந்து      தொண்டாற்றியவர்கள்    பலராவர்.
அவர்களிலே    சிலர்   நாடு   விடுதலை  பெற்ற  பின்னரும் பத்திரிகைத்
துறையோடு   தொடர்பு   கொண்டுள்ளனர்.   அவர்களில்,   திருவாளர்கள்
ஏ.ஜி.வெங்கடாசாரியார்,   கி.சடகோபன்,  தி.ஜ.ர.,  ஹரன், (இவர்  தற்போது
இலங்கையில்   'ஈழ நாடு'  நாளிதழ்  ஆசிரியராக  இருக்கிறார்)  ஆகியோர்
முக்கியமானவர்களாவர்.

      சுருங்கச்   சொன்னால்,  'பத்திரிகை'  என்பது,  மொழி  வளர்ச்சிக்கு
19ஆம்  நூற்றாண்டில்  கிடைத்த புதிய சாதனமாகும்.  அந்த சாதனம், அதே
நூற்றாண்டில்     தோன்றிய    தேசிய     எழுச்சியைப்    பயன்படுத்திக்


1. பாரதியார் கட்டுரைகள்; 'தமிழில் சாஸ்த்ர பரிபாஷை'