கொண்டு, இந்திய மொழிகளுக்குப் புது வாழ்வளித்தது. அந்த வகையில்
தமிழ்ப் பத்திரிகை உலகில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் அவர்கள் சக்திக்கும்
அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்கும் ஏற்ப, தாய் நாட்டிற்கேயன்றி,
தாய் மொழியான தமிழுக்கும் தொண்டாற்றினர் என்பதில் ஐயமில்லை. விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய வாதிகளால் நடத்தப்பட்ட
தமிழ் நாளிதழ்களின் பெயர்கள் வருமாறு:
'சுதேசமித்திரன்', 'விஜயா', 'தேச பக்தன்', 'சுயராஜ்யா', 'தமிழ் நாடு',
'தேசோபகாரி', 'இன்றைய சமாச்சாரம்', 'தினமணி', 'இந்தியா', 'தினசரி', 'பால
பாரதி', 'ஜெயபாரதி', 'சண்டமாருதம்', 'பாரத தேவி', 'தந்தி',
கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய அணிகளைப் பூண்டு, தமிழ்த்தாய்
அழகு நடை போட விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ் பத்திரிகைகள்
பெரிதும் பயன்பட்டுள்ளன. விடுதலை பெற்ற பின்னரும் பயன்பட்டு
வருகின்றன. தனித்தமிழ்ப் பற்றுடையோர், பத்திரிகைத் தமிழை மனநிறைவுடன்
ஏற்கமாட்டார்கள். ஆம் ; பண்டிதர் தமிழுக்கும் பத்திரிகைத் தமிழுக்கும்
வேற்றுமையுண்டென்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மக்கள்
எல்லோரும் கல்வியறிவுடையவர்களானால், இந்த வேற்றுமை சிறிதளவு
குறையலாம். ஆனால், அப்போதும் அடியோடு மறையாது. மக்கள்
எல்லோருமே பண்டிதர்களாவது என்றைக்கும் சாத்தியமில்லையல்லவா!