பக்கம் எண் :

266விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

                      பதிப்பகங்களின் பணி

     பதிப்பகங்கள்  மொழி  வளர்ச்சிக்கு  இன்றியமையாது   தேவைப்படும்
சாதனங்களாகும்.  நவீன  அச்சுயந்திரம்  தோன்றுவதற்கு  முன்பு இத்தகைய
பதிப்பகங்கள் இருக்கவில்லை.  அச்சு யந்திரம் தோன்றிய பின்னர், நூல்களை
வெளியிடுவது, ஒரு கலையாக மட்டுமன்றி, இலாபந்தரும் தொழிலாகவும்-மொழி
வளர்ச்சிக்கான  தொண்டாகவும் வளர்ந்தது. இதற்கு, நாட்டில் ஏற்பட்ட தேசிய
எழுச்சியும்   பெருந்துணையாக   அமைந்தது.   அதனால்,   இத்துறையிலும்
தேசியவாதிகளே முன்னோடிகளாக இருந்து பணிபுரிந்தனர்.

     இந்தியாவில், அங்கு இங்கு எனாதபடி எங்கெங்கும் ஆங்கில மொழியே
ஆதிக்கம்,  செலுத்தி  வருவதால், பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம்
நூற்றாண்டின்    முதலிரண்டு   பத்தாண்டுகளிலும்   ஆங்கிலம்   படித்தவர்
களிலிருந்தே  நூலாசிரியர்கள்  தோன்றினர்.  நூற்களை வாங்குவோரில் மிகப்
பெரும்பாலோர் ஆங்கிலம் படித்தவர்களாகவே இருந்தனர். இதனால், அந்தக்
காலக்கட்டத்திலே    இந்தியாவில்    ஆங்கில     நூற்களை   வெளியிடும்
பதிப்பகங்களே தோன்றின.

ஜி.ஏ.நடேசன்&கம்பெனி

     சென்னை நகரில் " ஜி.ஏ.நடேசன் அண்டு கம்பெனி ' ஏற்பட்டு,  அதன்
சார்பில்  ஆங்கில  நூற்கள் வெளியிடப்பெற்றன. இதனை நிறுவிய திரு.ஜி.ஏ,
நடேசன்  அவர்கள்,   சிறந்த   தேசபக்தர்.   காந்தியடிகளின்   நெருங்கிய
நண்பருமாவார். இவர்,தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய சத்தியாக்
கிரகத்திற்கு  ஆதரவாக இருந்தார். சென்னையில் 'இந்திய - தென்னாப்பிரிக்க
சங்கம் அமைத்து,அதன் சார்பில் பொருள் திரட்டி,தென்னாப்பிரிக்காவிலிருந்த
காந்தியடிகளுக்கு அனுப்பிவந்தார். இதனை, காந்தியடிகளே  கூறக்கேட்போம். 

     "அந்த  நாட்களில்  திரு.ஜி.ஏ.நடேசன்  ஒருவர்தான்   வெளிநாடுகளில்
இருந்த  இந்தியர்களுடைய   துன்பங்களை   ஆராய்ந்தவர்;   மதிப்பிற்குரிய
உதவியாளர்;  அவர்களுடைய  விஷயங்களை  நன்கு  எடுத்துச்  சொல்பவர்.
இப்படிப்பட்டவர் இந்தியாவில் அப்போது திரு.ஜி.ஏ.நடேசன் ஒருவரே என்றும்
சொல்லலாம்.  எனக்கும்  அவருக்கும்   கடிதத்  தொடர்பு  உண்டு.  அயல்