நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் சென்னை சேர்ந்த போது
அவர்களுக்கு திரு.நடேசன் முழு உதவியும் செய்தார்."1 பாரதியார் பாட்டு!
தேசியக்கவி பாரதியாரின் கவிதைகளும் பிற நூல்களும் தமிழ்மொழிக்கு
புதிய வரவுகள் எனலாம். அத்துடன், அவை அன்னிய ஆட்சியையும்,
அறிவுக்குப் புறம்பான பழக்க வழக்கங்களையும் தாக்கும் பிரசார இலக்கியங்
களாகையால்,பாரதியாருடைய எழுத்துக்களைப் பிரசுரிக்க நூல் வெளியீட்டகம்
எதுவும் முன்வரவில்லை. ஒரு சமயத்தில் திரு.ஜி.ஏ.நடேசன் அவர்களை
அணுகி, தம்முடைய பாடல்களை வெளியிட பாரதியார் உதவி கோரினார்.
அவர், அந்நாளில் மிதவாத காங்கிரஸ்காரராக விளங்கிய திரு.வி.கிருஷ்ணசாமி
ஐயர் அவர்களைக் கைகாட்டிவிட்டார். ஐயரவர்கள், பாரதியாரின் மூன்று
பாடல்களைப் பதினையாயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சடித்து, பள்ளிக்
கூடங்களுக்கும், பொது அமைப்புக்களுக்கும் இலவசமாக வழங்கினாராம்.
1907ல் வடக்கே சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைக்கு
பாரதியார் சென்றார். அதிலே, காங்கிரசிலிருந்த தீவிரவாதிகளுக்கும்
மிதவாதிகளுக்கும் பலப் பரீட்சை நடந்தது. பாரதியார் தீவிரவாதிகள் குழுவில்
இருந்தார். சூரத்திலிருந்து திரும்பியதும் "எங்கள் காங்கிரஸ் யாத்திரை" என்ற
தலைப்பிட்டு, இரண்டணா விலையில் சிறிய பிரசுரமொன்றைத் தமிழில்
வெளியிட்டார். அதனையடுத்து, " புதிய கட்சியின் கோட்பாடுகள் " என்ற
மற்றொரு பிரசுரத்தையும் தமிழில் வெளியிட்டார். முதல் பிரசுரத்தில், சூரத்தில்
தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்குமிடையே நடந்த போராட்டத்தை
விவரித்தார். இரண்டாவது பிரசுரம், சூரத் காங்கிரஸ் மகாசபையில் ஏற்பட்ட
பிளவு காரணமாகத் தோன்றிய தீவிரவாதிகள் கட்சியின் கொள்கைகளை
விளக்கி திலகர் நிகழ்த்திய சொற்பொழிவாகும். அதன் விலை ஓரணா.
பாரதியார் வெளியிட்ட இந்தப் பிரசுரங்கள் தமிழ் உரைநடையில் அவரால்
ஏற்படுத்தப்பட்ட மறுமலர்ச்சியைக் காட்டுவனவாக இருந்தன.
1907ல் “ ஸ்வதேச கீதங்கள் " என்ற தலைப்புடன் பாரதியாரின் 14
பாடல்கள் அடங்கிய நூல் இரண்டணா விலையில் அவராலேயே
1. காந்தி நூல்கள் தொகுப்பு 1; பக்.297. 336