பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 271

அதுவும்  பாரதியாரின்  கவிதை,  கட்டுரை,  கதை  நூல்களை  வெளியிட
இணங்கியது.

'தமிழ் வளர்ப்புப் பண்ணை'

     1921ல் - பாரதியார் இறப்பதற்கு  சில  மாதங்களுக்கு  முன்பு - " தமிழ்
வளர்ப்புப் பண்ணை "யின்  செயலாளர்  தமிழ்  மக்களுக்கு விடுத்த வேண்டு
கோளின் ஒரு பகுதி வருமாறு:

     "ஸ்ரீமான்  சி. சுப்பிரமணிய  பாரதியின் தமிழ் புதுமை, தெளிவு, முதலிய
பல  குணங்களுடைய  தாய்த்  தமிழ் நாட்டில் எல்லா ஜனங்களாலும் மிகவும்
அன்புடனும்  ஆதரவுடனும்  போற்றப்பட்டு  வருகிற  விஷயம் உங்களுக்குத்
தெரியாததன்று.

     "கீர்த்தி   வாய்ந்த  கவியரசர்  ஒருவர்  தமிழ்   நாட்டில்   இருப்பது
நமக்கெல்லாம்  சால மிகப் பெருமையன்றோ? இவர் தமிழ் நாட்டையும் தமிழ்
பாஷையையும்  மேம்படுத்தியதற்கு   நாம்   என்ன   கைம்மாறு   செய்யப்
போகிறோம்?

     "ஸ்ரீமான்  பாரதியார்  பன்னிரண்டு  வருஷம்  பிரிட்டிஷ் இந்தியாவை
விட்டுப்   புதுச்சேரியில்  வனவாஸம்   செய்து   கொண்டிருந்தார்.  அந்தக்
காலத்தையெல்லாம்,  அவர்  அங்கு  வீணே   கழிக்கவில்லை.   ஏராளமான
நூல்களெழுதிக் குவித்துக் கொண்டிருந்தார்.

      "அவற்றையெல்லாம்  இப்போது  அச்சிடப்  போகிறார்.  அவற்றை 40
புஸ்தகங்களாகப்  பிரித்து  ஒவ்வொரு புஸ்தகத்திலும் 10000 பிரதிகள் அச்சிட
உத்தேசித்திருக்கிறார்.  40 "x" 10000 ( நாற்பதைப் பத்தாயிரத்தால் பெருக்கும்
போது) 4  லக்ஷம் சுவடிகளாகின்றன. இந்நான்கு லக்ஷம் புஸ்தகங்களும் தமிழ்
நாட்டில்    மண்ணெண்ணை    தீப்பெட்டிகளைக்    காட்டிலும்     அதிக
ஸாதாரணமாகவும்,  அதிக  விரைவாகவும்,  விலைப்பட்டுப்   போமென்பதில
சிறிதேனும் ஸந்தேகமில்லை.

     "இவற்றை  அச்சிட 20000  ரூபாய் பிடிக்கும், விளம்பரச் செலவு; 10000
ரூபாய். - 30000 ரூபாய்க்கு மாஸம் 1க்கு 2 ரூபாய் வீதம் இரண்டு வருஷத்து
வட்டி ரூபாய் 14,400. ஆக மொத்தம் செலவு ரூபாய் 44,000.