மேலும், கதைகளில் வரும் சம்பவங்களையொட்டி, இடையிடையே அழகான
படங்களைப் புத்தகங்களில் சேர்க்கப்போகிறேன். இவை பொது ஜனங்களுக்கு
ஆச்சரியமாகவும் அதே சமயத்தில் கவர்ச்சிகரமாகவும் இருக்கும். இவற்றோடு,
புத்தகங்களின் விலையும் குறைவாக இருக்கும். எப்படியென்றால், வசன
நூல்கள் ஒவ்வொன்றும் எட்டணா விகிதமும் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும்
கூடியமட்டும் நான்கணா விகிதமும் விலை வைக்க உத்தேசம். ஏற்கனவே நான்
வெளியிட்டிருக்கிற நூல்களினால் தமிழ் நாட்டில் எனக்கு நிகரில்லாத கீர்த்தி
ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்திருக்கிற காரணத்தினால்,என்னுடைய
நூல்கள் நிறைய விற்பனையாகி வெற்றி கிட்டுமென்பதும் நிச்சயம்."1 பாரதியார் நூல்களை வெளியிடத் திட்டமிட்ட 'தமிழ் வளர்ப்புப்
பண்ணை' யோ, வ.வே.சு. ஐயர் அமைத்த ' கம்பர் நிலைய'மோ தொடர்ந்து
தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்ற இயலாமல், கால வெள்ளத்தில் சிக்கி
மறைந்துபோயின.
இது, திலகர் சகாப்தத்தின் சூழ்நிலை. காந்தி சகாப்தம் தோன்றிய
பின்னர், நிலைமை மாறியது - குறிப்பாக, ஒத்துழையாமை இயக்கத்திற்குப்
பின்னர், சாதாரணப் பொதுமக்களிடையே அரசியல் விழிப்பு ஏற்பட்டது.
தமிழ்மட்டுமே படித்தவர்கள், தேசியத் தலைவர்களின் வரலாறுகளைப்
படிப்பதிலே, தேசியப் பாடல்களை மனனஞ் செய்து பாடுவதிலே மிகுந்த
ஆர்வங் காட்டினர். அதன் விளைவாக, தமிழகத்தில் பதிப்பகங்கள் சில
தோன்றின. புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்ட அரசியல் நூல்களையும்;
ஜான்சிராணி லட்சுமிபாய், காந்தி, திலகர், லஜபதி போன்ற இந்தியத்
தலைவர்கள் ; மாஜினி, கரிபால்டி, டிவாலரா போன்ற அயல் நாடுகளின்
விடுதலை வீரர்கள் ஆகியோர் வரலாறுகளையும் வெளியிட்டன.
கம்பநிலையம்
வ.வே.சு. ஐயர், தம்முடைய சொந்தப் பொறுப்பில் புதுவையில் 'கம்ப நிலையம்'என்ற பெயரில் பதிப்பகமொன்றை
நிறுவினார். இதன் சார்பில் நல்ல நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். 'கம்பநிலையத்'தை வலுப்படுத்த ஐயாயிரம் ரூபாய்களைத் திரட்டும்
1. 'நான் காண்ட நால்வர்'; பக்கம் 258-59.