பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 275

பொருட்டு,  தம்முடைய  நண்பர்களுக்குக்  கடிதம் எழுதிக் கையேந்தினார்.
ஒரு கடிதத்தில் ஐயர் எழுதியது வருமாறு:

     "அன்புள்ள ஐயா,

     தமிழனுக்காகத்  தாங்கள்  செய்யவேண்டும்   என்கிற  காரியங்களில்
பெரும்பாலானவற்றைச்    செய்யவேண்டும்   என்று   நான்  சங்கற்பித்துக்
கொண்டிருக்கிறேன்  என்பது  இக்கடிதத்துடன் வரும் விளம்பரங்களினின்று
தெரியவரும்.  ஆனால்,  அவ்விளம்பரங்களை  வெளிப்படுத்திச் சுமார் ஒரு
வருட காலமாகியும், அவற்றுள் தெரிவித்திருக்கிற ஏற்பாட்டில் சுமார் முப்பது
பேர்களே    சேர்ந்திருக்கிறார்கள்.   ஆதரவாளர்கள்   குறைவினால்தான்,
உத்தேசித்த   காரியங்களைச்  செய்து முடிக்க முடியவில்லை. சந்திர குப்த
சக்கரவர்த்தி   சரித்திரத்தைத்   தவிர,   மற்ற   நூல்களெல்லாம்   முதல்
பதிப்பிலேயே நிற்கின்றன. அவற்றை வாங்க  ஐந்நூறு பேர் முன்வரவில்லை.
அதனால்தான் இறகினைக் கொண்டே ஜீவிக்கவேண்டியிருப்பதால், ஆங்கில
நூல்கள் வெளிப்படுத்த உத்தேசித்துள்ளேன்.

     கம்ப ராமாயணத்தை மொழி பெயர்ப்பதாக விளம்பரம் செய்யவில்லை.
அதற்கு ஆங்கிலத்தில் ஒரு விமர்சனம் எழுதி இன்றியமையாத கட்டங்களை
மட்டும்  சாத்தியமான  அளவு  மொழி  பெயர்த்து,  கம்பரானவர், ஹோமர்,
விரிஜில்,    தாந்தேக்களை   விட   மாத்திரமில்லை,   வால்மீகி,  வியாசர்
இவர்களைவிடச்    சில   அம்சங்களில்  பெரியவர்  என்றும், மற்றவர்கள்
இணையானவர்கள்     என்றும்      காட்டி,    தமிழர்  அல்லாதார்க்கும்
அநியாயமாய்   நேர்ந்து  விட்டதைப்  பற்றி ஆங்கிலம் கற்ற தமிழருக்கும்,
தமிழரின்    பெருமையை  ஒருவாறு  வெளிப்படுத்த  வேண்டும்  என்பது
என் கருத்து. ஆனால், என் விருப்பம் அந்நூல்களில் ஆழமாகவில்லை.

     உலகத்தில்   அறியக்கூடிய,        அனுபவிக்கக்கூடிய சகல அறிவு
களையும், சுவைகளையும்       ஆங்கிலம்  முதலிய     அன்னிய பாஷை
களுக்குச் செல்லாமல்,     தமிழ்   மூலமாகவே  ஒவ்வொருவரும்  அறியும
படிக்கும்         அனுபவிக்கும்படிக்கும்     செய்துவிட  வேண்டியது நம
போன்ற    தேசபக்தரது    கடமை   .அந்தப்பிரதான        காரியத்தைச் 
செய்வதற்கு வேண்டிய சீவனமும் செலவும்    வேறுமாதிரி      சம்பாதிக்க