பக்கம் எண் :

276விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

இயலாமலே  ஆங்கில  நூல்களை  இடையிடையே எழுதி வெளியிடுகிறேன்."1

     சுப்பிரமணிய  சிவா, "திலகர்-காந்தி தரிசனம்" என்ற ஒரு நூலைத் தவிர
வேறு  அரசியல்  நூல் எதையும்  எழுதி  வெளியிட்டதாகத்  தெரியவில்லை.
அவருடைய  நூல்களெல்லாம்  வேதாந்த சார்புடையவையாகும். ஆரம்பத்தில்
அவரும்  தாம்  எழுதியவற்றைத்  தமது  சொந்த முயற்சியாலேயே வெளியிட
வேண்டியிருந்தது.  அந்தக்  காலத்தில்   சிவா,   பலருடைய  ஒத்துழைப்பை
எதிர்பார்த்து,  அது  கிடைக்காதபோது  மனமுடைந்தவரானார். அப்படிப்பட்ட
ஒரு நேரத்தில் சிவா தம் நண்பரொருவருக்கு எழுதிய கடிதம் வருமாறு:

     "'சச்சிதானந்த   சிவம்'   அச்சுக்குக்   கொடுத்து,  8  பக்கம்  அடுக்கி
அப்படியே  வைக்கப்பட்டிருக்கிறது.  நாளுக்கு நாள் காகிதத்தின் விலை ஏறிக்
கொண்டே      போகிறது.      ஆதலால்     இப்பொழுதே     காகிதம்
வாங்கிப்போட்டால்தான்  நல்லது. இல்லாவிட்டால், நெடுநாட்களுக்கு புஸ்தகம்
வெளிவருவதற்கு    வழியில்லை.    ஆகையால்      தாங்கள்   அனுப்பிக்
கொடுத்தால்தான்     நன்றாயிருக்கும்.    சுபகாரியங்களெல்லாம்    சீக்கிரம்
நடக்கவேண்டும்.  ஆகையால்  தங்களிடத்திலிருந்து பணத்தை எதிர்பார்த்துக்
கொண்டேயிருக்கிறேன்."

'சாது அச்சுக் கூடம்'

     தமிழ்ப்பெரியார்   திரு.   வி.   கலியாணசுந்தரனார்,       சென்னை
ஆலைத்தொழிலாளர்கள் தந்த  ஐயாயிரம் ரூபாயைக் கொண்டு,  சொந்தத்தில்
'சாது அச்சுக்கூடம்'   அமைத்து நடத்தினார்.  அந்த    வசதியைக்கொண்டு
தம்முடைய நூல்களைத் தாமே அச்சடித்து வெளியிட்டார்.

     சென்னை  எம்.எஸ்.சுப்பிரமணிய    ஐயர்     என்பவர்  நாவன்மை
மிக்க    பேச்சாளர்.     மக்களின்     உள்ளங்களைக் கவரும் வகையில  
தமிழில் எழுதத்தக்க     எழுத்தாளர்,  சரித்திர     ஞானமிக்கவர்.  இவர், சொந்தத்தில்    பதிப்பகங் கண்டு    'சுயராஜ்ய  பேரிகை'      என்னும்
பெயரில், ஓரணா விலையில்    , தொடர்ந்து    பல தேசிய    நூற்களை


1. 'நான்கண்டநால்வர்'; பக் 146-147 346