பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 283

                    கல்வித்துறையில் புரட்சி!

     இந்தியாவில்  மக்கள்  எல்லோருக்கும் கல்வியளிக்க பிரிட்டிஷ் ஆட்சி
மறுத்தது.  பிரிட்டனிலே  பள்ளிக்குச்  செல்லும்  பருவத்தை அடைந்துவிட்ட
பிள்ளைகள்    எல்லோருக்கும்   கட்டாய   இலவசக்   கல்வியளிக்கப்பட்ட
காலத்திலே,  அதே  வசதியை  இந்தியாவிலுள்ள பிள்ளைகளுக்கும் செய்துதர
மறுத்தது  பிரிட்டிஷ்  ஆதிக்கம்.  இந்த  உண்மையை உணராமல் பிரிட்டிஷ்
ஆட்சியால்தான்  இந்திய  மக்கள்  எல்லோரும் கல்வியறிவு பெற்றனர் என்று
நம்  நாட்டு அறிஞர்களிலேயும் பலர் தவறாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர்.
நம்  நாட்டவரில்  சிலருக்குமட்டும்  உயர்தரக் கல்வி கற்க பிரிட்டிஷார் வசதி
செய்து  கொடுத்தனர்  என்றால்,   எதற்காக?   இந்த   நாட்டில்  பிரிட்டிஷ்
அரசாங்கத்தை    நடத்துவதற்காகத்   தேவைப்பட்ட   சிப்பந்திவர்க்கத்தைப்
படைப்பதற்காகத்தான்.  மற்றபடி,  இந்திய  மக்களுடைய அறியாமை போக்கி,
அவர்களையெல்லாம்  அறிவாளிகளாக்குவதற்கு  அல்ல. இதனை, அந்நாளில்
இந்தியாவை      ஆண்ட      பிரிட்டிஷ்காரர்களே      வெளிப்படையாக
ஒப்புக்கொண்டனர்.       பிரிட்டிஷார்      இந்தியர்களுக்கு      இழைத்த
கொடுமைகளிலெல்லாம்    பெரிய    கொடுமை   எதுவென்றால்,   இந்தியக்
குழந்தைகள்   எல்லோருக்கும்  ஆரம்பக்  கல்வியைக்கூட  கட்டாயமாகவும்
இலவசமாகவும் கொடுக்க மறுத்தார்களே, அதுதான்.

     அச்சுயந்திரம் தோன்றியதால் பதினெட்டாம் நூற்றாண்டிலே உலகெங்கும்
கல்வி    பயிலும்   முறையில்   புரட்சிகரமான   மாறுதல்கள்   ஏற்பட்டன.
பாடமுறைகளும்  பயிற்றுவிக்கும் வழிகளும் முற்போக்கான முறையில் மாறுதல்
அடைந்தன.  அந்த மாறுதல்கள் பிரிட்டிஷாராலும் தவிர்க்க இயலாதவகையில்
இந்தியாவிலும் - அவர்கள்  மூலமாகவே -  நடைமுறைக்கு  வந்தன.  ஆம்;
ஆரம்பக்  கல்வியானது  மொழியும் கணக்குமாக மட்டும் இருந்த நிலை மாறி,
பூகோளம்   -   சரித்திரம்   போன்ற   வேறு   பல   புதிய  பாடங்களும்
பயிற்றுவிக்கப்பட்டன.

     கல்வியை   நான்கு   வகையாக   வகுத்தனர்   நிபுணர்கள்.   அவை,
ஆரம்பக்கல்வி -   நடுத்தரக்கல்வி  -    உயர்தரக்கல்வி -   தொழில ்கல்வி
ஆகியனவாம்.     தேர்வு  எழுதல்,  பட்டம்     பெறுதல்   ஆகியவையும
புதிய கல்வித்திட்டத்திலே       லந்தன. ஆசிரியர்களைத்     தயாரிப்பதும்