பாஷையைப் படிக்கத் துவக்கவேண்டும் என்பது நமது அபிப்பிராயம்.
சாதாரணமாய் நாம் சொல்லிய முறையில் தமிழில் கல்வி கற்றபிள்ளைகள்
பன்னிரண்டு வயதில் ஆங்கிலத்தைப் படிக்கத் துவக்கினால் இரண்டு மூன்று
வருஷங்களுக்குள், அந்தப் பாஷையிலும் உண்மையான தேர்ச்சி
பெற்றுவிடுவார்கள். "இவ்விதம் பொதுக்கல்வி கற்பித்த பிறகு,மேலே அவரவர்களுடைய
அறிவின் போக்குக்கேற்றபடி, மாணவர்களைப் பேரிலக்கியம், கணிதம்,
சாஸ்திரங்கள், தர்சனங்கள்,சிற்பம் முதலியவற்றுள் ஒன்றில் பங்குதாரராகும்படி
செய்ய முயலவேண்டும்."1
தம்மைக் கவர்ந்த தேசியக் கல்வி முறையை தாம் நடத்தி வந்த
சேரமாதேவி தமிழ்க் குருகுலப்பள்ளியிலும் அமுல் நடத்தினார் ஐயர்.
ஒழுக்கக் கல்வி எங்கே?
திரு.வி. கலியாணசுந்தரனார்,'சாது முனிவர்' என்று அழைக்கப்பெற்றார்.
வெள்ளைவேட்டித் துறவியாக விளங்கிய அப்பெரியார், பிரிட்டிஷ் ஆட்சி
அமுல் நடத்திய கல்வி முறையின் கேடுகளை விளக்கிக் கூறியிருப்பதாவது:
"தற்காலக் கல்வியாளர் நோக்கம் என்ன?எவ்வழியிலாவது வயிற்றுக்குப்
பிழைப்புத் தேடிக்கொள்ள வேண்டுமென்பதன்றோ? பரீட்சையில்
தேர்வதற்கெனவும், பட்டம் பதவிக்கெனவும் பயிலும் கல்வி கல்வியாமோ?
பாடசாலையில் பயிலும் மாணாக்கர் தற்போது எண்ணுவன பேசுவன என்ன?
தூர்த்த உணர்வு இளமைப் பருவத்திலேயே இந்நாளில் அரும்பிவிடுகிறது."
தற்காலக் கல்வியின் கொடுமை என்னே! என்னே! கலைவாணி! நின்
ஒழுக்கக் கல்வி எங்கே சென்றது? யாண்டுற்றது? நினது ஒழுக்கக்கல்வி
இந்நாளில் அருகியுள்மையால், திருவள்ளுவர், இளங்கோவடிகள், சாத்தனார்,
திருத்தக்கதேவர், தெய்வச் சேக்கிழார், கம்பர் முதலிய புலவர்கள்
தோன்றுவதில்லை.
"ஆங்கிலம் பயில வேண்டாமென்று யான் சொல்ல வர
வில்லை. ஆங்கிலம் அறிவு வளர்ச்சிக்குப் பயில வேண்டு
மென்பது எனது கருத்து. ஷேக்ஸ்பியர், ஷெல்லி, காண்ட்,
ஸ்பைனோஜா முதலியோர் அரிய உரைகளைக் காட்டி, தீ
1. 'பாலபாரதி', ஆகஸ்டு.1926.