பக்கம் எண் :

30விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

மொழி  பெயர்த்து  வெளியிட்டார். பக்திப்    பாடல்களையும்   இயற்றினார்.

     "ராம்  மோகனருக்கு  அவரது தாய்மொழியான  வங்க  மொழியிலிருந்த
பயிற்சிக்கு அவர் ஆங்கிலத்தில்  இயற்றிய வங்காளி இலக்கணமே சான்றாகும்.
அந்நூலை  அவர்  பின்னர்  வங்காளியில் மொழி பெயர்த்தார். அவர் காலம்
வரை  வெளியாகியிருந்த  வங்காள  இலக்கணங்களில் அதுவே தலைசிறந்தது.
சில வகையில் பார்த்தால், பிற்கால இலக்கணம் எதுவுமே அதை மிஞ்சவில்லை
என்று சொல்லாம்."

     இராம்   மோகனர்,   'பிரம்ம சமாஜம்'   என்ற   நிறுவனம்  ஒன்றைத்
தோற்றுவித்தார்.   படித்த  மக்களிடையே அதற்கு மிகுந்த செல்வாக்கிருந்தது.
அந்த சமாஜம் வங்க மொழியின் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டது.

     இராமலிங்கர்,  தம்  இளமைப்  பருவத்திலே  சைவசமயத்தில் ஆழ்ந்த
நம்பிக்கை    கொண்டிருந்தார்.   வேதங்கள்,   ஆகமங்கள்,   புராணங்கள்,
இதிகாசங்கள்  ஆகிய  இலக்கியங்களைத்  தம் சொந்த முயற்சியால் பழுதறப்
பயின்றார். சமயத்திலும், சாத்திர - தோத்திரங்களிலேயும்  ஆழ்ந்த நம்பிக்கை
கொண்ட நிலையில் பல்லாயிரம் பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.  அந்தப்
பாடல்கள்    ஐந்து   திருமுறைகளாகத்   தொகுக்கபட்டுள்ளன.    ஆனால்,
நாளடைவில்  சமய  பேதங்களிலே   நம்பிக்கையற்றவரானார். வேதங்களிலும்
சைவ  ஆகமங்களிலும்  அவர் வைத்திருந்த பற்றுக்களெல்லாம் பறந்தோடின.
சாதி   சமய   பேதங்களற்ற  மனித  சமுதாயத்தைப்  படைக்கப்  பேராவல்
கொண்டார்.  மூடப்  பழக்க   வழக்கங்களிலிருந்தும்   மக்களை  விடுவிக்கப்
பெருமுயற்சி   எடுத்துக்கொண்டார்.   அவ்வகையில்   அவர்  இயற்றியுள்ள
கவிதைகள் ஆறாவது திருமுறையாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
உரைநடையிலும்   பல   இலக்கியங்களைப்   படைத்தார்.  அதனால்,  தமிழ்
இலக்கியத் துறையிலே மகத்தானதொரு புரட்சியை ஏற்படுத்தி,சமயப்பற்றுடைய
வைதிகர்களின்  எதிர்ப்புக்கு  இரையானார்.  சமயம்  பற்றி   அவர்  கருத்து
வருமாறு:

     "சைவம்     வைணவம்     முதலிய     சமயங்களிலும்,   வேதாந்தம்
சித்தாந்தம்     முதலிய     மதங்களிலும்    லக்ஷியம்     வைக்க  வேண்
டாம்    (அவற்றில்   தெய்வத்தைப்   பற்றி)        குழூஉக்     குறியாகக்
குறித்திருக்கிறதேயன்றிப்       புறங்கவியச்      சொல்லவில்லை.     ஆத