லால் அவற்றில் லக்ஷியம் வைக்கவேண்டாம். ஏனெனில், அவைகளிலும்
அவ்வச் சமய மதங்களிலும் அற்பப்பிரயோசனம் பெற்றுக் கொள்ளக்
கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும்
ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக்
காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானேயிருக்கின்றேன். நான்
முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று
அளவு சொல்ல முடியாது. அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது
பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாக்ஷி வேறே வேண்டிய
தில்லை. நான் சொல்லியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கிற
ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய
ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி
சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்த
தென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக
இருந்தது."1 சுவாமிகள், இலக்கியத் துறையிலே தமக்கு முன் தோன்றிய சான்றோர்கள்
செய்யாத பெரும் புரட்சியைச் செய்திருக்கின்றார். தாமே பாடியவையும்,தமக்குப்
பெரும்புகழ் தேடித் தந்தவையுமான முதல் ஐந்து திருமுறைகளிலுள்ள
திருவருட்பாப் பாடல்களை தாம் வெறுத்துக் கழித்துவிட்டதனை வெளிப்
படையாகக் கூறியுள்ளார். இன்றைக்கு கம்யூனிஸ்டு நாடுகளில்தான் இதுபோன்ற
இலக்கியப் புரட்சி நிகழ்கின்றது. கருத்து வளர்ச்சியின் காரணமாக, தாமே
முன்பு படைத்த இலக்கியங்களை, தேவயற்றவையென்றும், புறக்கணிக்கத்
தக்கவையென்றும் வெளிப்படையாகக் கூறியவர் தமிழ் இலக்கியக்
கர்த்தாக்களிலே வள்ளலார் ஒருவரே யாவார்.
தொல்காப்பியத்தில் குற்றம்!
தமிழ் மொழி -வடமொழி ஆகிய இரு மொழிகளின் பண்டை இலக்கண
நூல்களைப்பற்றியும் வள்ளற் பெருமான் தம்முடைய கருத்தை வழங்கியுள்ளார்.
அதுவருமாறு :
" வியாகரணம் - தொல்காப்பியம் - பாணீநீயம் - முதலியவைகளில்
சொல்லியிருக்கின்ற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே. அவை
1. திருவருட்பா-உபதேசப்பகுதி;பக்.135