பக்கம் எண் :

32விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

களில் குற்றமே  சொல்லியிருக்கின்றார்கள்  . எவ்வாறெனில் ;-  தொண்ணூறு
தொள்ளாயிரம் என்கின்ற கணிதத்தின் உண்மை நான் சொன்ன பிறகு தெரிந்து
கொண்டீர்களல்லவா?  இப்படியே  ஒன்று,  இரண்டு  முதல்  நூறு  முதலான
இலக்கணங்களுக்கும் உகர  இறுதி வருவானேன்? ஒருவாறுசித்தர்கள் காரணப்
பெயராக இட்டிருக்கிறார்கள். தொல்-நூறு தொண்ணூறென்றும், தொல்-ஆயிரம்
தொள்ளாயிரமென்றும்  வழங்குகின்றன.  தொல்  என்பது  ஒன்று   குறையத்
தொக்கிய.  தொன்மை - தொல்லெனப் பிரிந்தது. வழக்கத்தில்  தொள்ளாயிரம்
தொண்ணூறு என  மருவியது.  இதற்குப் பத்திடத்திற்கு ஓரிடம் குறைந்த முன்
ஆயிரமென்றும், ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க. இப்படி நான்
சொன்னது  போல்  சொன்னால், சிறுகுழந்தைகள்  கூட அறிந்து கொள்ளும்."1

      வள்ளலார்   தாம்   கொண்டிருந்த   புரட்சிகரமான  கொள்கைகளை
உரைநடையில்  எழுதி    மக்கள்  மத்தியில் பரப்பியதோடன்றி,  எண்ணற்ற
பாடல்கள்  இயற்றியும் பறை  சாற்றினார். அவை தேசிய ஒருமைப்பாட்டினை
வற்புறுத்துவனவாகும்.

     ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் .
     ஒருமை உளராகி உலகியல் நடத்தவேண்டும்

      இச்சாதி சமயவிகற் பங்களெல்லாம் தவிர்ந்தே
      எவ்வுலகுஞ் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்

     கருணையிலா ஆட்சி கடுகி யொழிக
         அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
     நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்று நினைத்து
          எல்லோரும் வாழ்க இசைந்து.

     பொறித்தமதஞ் சமயமெலாம் பொய்பொய்யே
          அவற்றில் புகுதாதீர்

     இராமலிங்க  வள்ளலார்  சுமார்  ஆறாயிரத்துக்கு  மேற்பட்ட  அருட்
பாக்களை  இயற்றியுள்ளார்.  அவற்றிலே,   பிற்காலத்தில் தோன்றிய தேசிய
எழுச்சிக்குத்  தோற்றுவாயாக அமைந்த சமூக சீர்திருத்தப் புரட்சிக் கருத்துக்
களடங்கிய  பாடல்கள்  ஓராயிரத்துக்கு மேற்பட்டவையாகும். இந்திய தேசிய
எழுச்சிக்குத்     தமிழகத்தைப்     பொறுத்தவரையில்      இராமலிங்கரே
முன்னோடியாவார்.