பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 301

யமாகவும்      துப்புரவில்லாமலும்      இருப்பினும்,     ஏதாவது    ஒரு
கட்டத்தில்  ஆரம்பித்தாலொழிய,  இந்த இக்கட்டுத் தீராது. பாடப்புத்தகங்கள்
எழுதுவோர் துறவிகளல்லர். அவற்றிற்குக் கிராக்கி உண்டானால் ஒழிய அவை
எழுதப்படும்     என்று     எதிர்பார்ப்பதற்கில்லை.   தமிழில்  போதிப்பது
தொடங்கினாலன்றி, தமிழில் எழுதிய பாடப்புத்தகங்களின் தேவை புலப்படாது.

      நாட்டு   மொழிகளில்    பௌதிக  விஞ்ஞானங்களைக்  கற்பித்தால்,
மாணவர் ஆங்கில மரபையும் ஆங்கில இலக்கணத்தையும் தேர்ந்து கொள்வதில்
இடையூறு  ஏற்படுமா என்ற விஷயத்தைப் பற்றி நாம் ஒரு திடமான முடிவுக்கு
வரவேண்டும். தற்போது உலக வழக்கத்திலுள்ள ஆங்கிலக் கலைச் சொற்களை
அந்தந்தப்    பிரதேச    மொழிகளுக்கு    ஏற்ப    எடுத்து    ஆள்வதில்
குற்றமொன்றுமில்லை. சில பாடங்களைக் கற்பிக்கு ம்போது 'மணிப் பிரவாளம்'
ஏற்படுவதால் ஆங்கில மொழிப் பயிற்சி அப்படியொன்றும் கெட்டுப் போகாது.
அப்படியே கொஞ்சம் நேரிட்டாலும் நஷ்டத்தைவிட லாபமே அதிகம்.

     அறிவுத்துறைக்  கல்வியில்  சில  அன்னியச்  சொற்களை உபயோகிக்க
வேண்டியிருப்பதால்    போதனாமொழியே    அன்னிய    மொழியாகத்தான்
இருக்கவேண்டும்   என்று   சொல்வது   தவறு   என்பது   என்   கருத்து.
மாணவர்களுக்குப்  புகட்டப்படும்  அறிவு,   தாய்   மொழியிலாவது  பிரதேச
மொழியிலாவது வழங்கப்படுமானால்,  அதனால் ஏற்படுகிற உடனடியான பயன்
மிகப்   பெரியது.   சில   அன்னியக்   கலைச்   சொற்களை   உபயோகப்
படுத்துவதனால்   இந்தப்   பயன்    கெட்டுவிடாது.   சுருங்கக்   கூறினால்,
போதனாமொழி  என்பது  வேறு. இந்தத் திட்டத்தைப் பின்பற்றினால் பிரதேச
மொழியில்  கலைச்  சொற்கள்  விரைவில் தாமாக உண்டாகும். போதனையில்
அன்றாடம்  ஈடுபட்டுள்ள  ஆசிரியர்கள்  இந்தக் கலைச் சொற்களை எளிதில்
தேடியெடுத்து   வழக்கத்திற்குக்   கொண்டுவர   முடியும்.   இங்கிலாந்திலும்
பிரான்சிலும்  பௌதிக  விஞ்ஞானக்  கல்வியின் ஆரம்ப  காலத்தில் லத்தீன்
மொழியிலும் கிரேக்க மொழியிலுமா பள்ளிக்கூட வகுப்புகளை நடத்தினார்கள்?