பக்கம் எண் :

302விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

     அன்னிய  கலைச்  சொற்களைத்  தாராளமாக  எடுத்துக் கொள்ளலாம்.
அதே  சமயம்  போதனை  பிரதேச  மொழியிலேயே  இருக்கலாம்.  பௌதிக
விஞ்ஞானங்களுக்கு நான் கூறியுள்ளது, மற்ற வகைப் பாடங்களுக்கும் பெரிதும்
பொருந்தும். ஒரு  மாணவன், வீட்டில் தன் சிறிய தம்பிக்குப் பாடம் சொல்லிக்
கொடுப்பதைப்  பார்த்திருந்தால், அறிவுத் துறைகளை எப்படி அன்னியக்கலைச்
சொற்களை  உபயோகித்துத்  தாய்மொழியிலேயே  கற்பிக்க முடியும்  என்பது
புரியும்.

      ஆங்கிலத்திலேயே   இதுவரை   கற்பித்துப்   பழகிவிட்ட  ஆசிரியர்
களுடைய  கஷ்டம்  எனக்குப்  புரிகிறது. வேறு எந்த  பாஷையிலும் கற்பிக்க
முடியாது  என்று  அவர்கள் எண்ணுகிறார்கள்.  நீங்கள்  குறிப்பிடுகிற அநேக
ஆட்சேபணைகளைச் சொல்லுகிறார்கள்.

      சென்னை   போன்ற   நகரத்தில்  பலமொழி   பேசும்  மாணவர்கள்
ஒருமித்துக்  கூடும் வகுப்புகளில், ஒரு பிரதேச மொழியைத் தேர்ந்தெடுப்பதில்
உள்ள கஷ்டம் எனக்குத் தெரியவே செய்கிறது.

      ஹோமர், வர்ஜில்  முதலியோரின் நூல்களைக் கற்பிக்கின்ற ஆங்கிலக்
கலாசாலை வகுப்புகளில்,  இந்த நூல்களை கிரேக்கமொழி, லத்தீன் மொழியிலா
கற்பிக்கிறார்கள்?  ஆங்கிலத்தைப்  போதனா  மொழியாகக்  கொண்டே இந்த
கிரேக்க, லத்தீன் இலக்கியங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

     பிரதேச  மொழிகளில்  பாடம் கற்பித்த போதிலும் கூட, இப்போதைக்கு
மாணவர்களும்  ஆசிரியர்களும்  ஆங்கில  மொழியில்  எழுதப்பட்ட  பாடப்
புத்தகங்களை  உபயோகிக்கும்படி  சொல்லலாம். ஆனால்,  பள்ளிக்கூடத்தில்
சொல்லித் தருவது பிரதேச மொழியிலேயே இருக்கவேண்டும்.

      "நீங்கள்   உடனே   உங்கள்   அதிகாரத்தின்  கீழ்  வேலைசெய்யும்
இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பியுங்கள். அன்னியக் கலைச் சொற்களை
உபயோகித்த  போதிலும்  பௌதிக  விஞ்ஞான  கணித  அறிவுத் துறைகளில்
பிரதேச   மொழியையே   பயன்தரத்   தக்க   முறையிலும்   அதிகமாகவும்
உபயோகிக்கும்படி அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்."

      கல்வித்துறை  இயக்குநர்  ஸ்டாத்தம்  அவர்கள்  கருத்துக்கு  எதிராக
ராஜாஜி     எழுதிய    இக்குறிப்பு,   கல்வியின்  எல்லாக்   கட்டங்களிலும்