பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 303

தாய்மொழியே   பயிற்றுமொழியாக   இருக்கவேண்டுமென்பதில்   அந்நாளில்
அவருக்கிருந்த  உறுதியையும்  தெளிவையும்  காட்டுவதாகும்.   "உயர்நிலைப்
பள்ளிகளில்  தமிழைப்  பயிற்றுமொழியாக்கியது  கல்லூரிகளிலும் தமிழிலேயே
பாடங்கள்  போதிக்கப்படுவதற்கான  முன்னோடி  நடவடிக்கையாகும்"  என்று
அப்போது அவர் அறிவித்தார்.

பெண்களுக்கென பல்கலைக் கழகம்

     பேராசிரியர் கார்வே என்பார், புனா நகரில் பெண்கள் பல்கலைக் கழகம்
ஒன்றைத்    துவக்கினார்.    அதில்,    மராத்தி   மொழியையே   எல்லாப்
பாடங்களுக்கும்  பயிற்றுமொழியாக்கினார். தேசியக்கவிபாரதியார், பேராசிரியர்
கார்வேயின் துணிகரமான முயற்சியை வரவேற்று எழுதியது வருமாறு:

      நமது   தேசத்தில்   இப்போது   புதிதாக  யோசனை  செய்யப்படும்
காரியங்களில்  பூனாவில்  ஸ்ரீ  கார்வே   என்பவர்   ஏற்படுத்தப்   போகிற
ஸ்தீரிகளின் சர்வகலா சங்கம் பிரதான வகுப்பைச் சேர்ந்தது.

     ஸ்தீரிகளுக்கென்று     தனியான     யூனிவர்சிடி    இதற்கு    முன்
பூமண்டத்திலேயே   இரண்டுதான்  இருக்கின்றன.  ஜெர்மனியின்   லைப்ஜிக்
பட்டணத்திலே  ஒன்றிருக்கிறது. ஜப்பானில் ஒன்றேற்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ்
சாம்ராஜ்யத்திலே  இந்தக்  காரியத்தை முதலாவது ஸ்ரீ கார்வேதான் ஆரம்பம்
செய்கிறார்.

     ஸ்ரீ கார்வே ஏற்படுத்தப்போகிற சர்வகலா சங்கத்தில்  தேசபாஷைகளின்
மூலமாகவே  சகல  சாஸ்திரங்களும் கற்றுக்கொடுக்கப்படும். இவருடைய சர்வ
கலா சங்கம்   ஸ்தாபனமாகிப்   பத்து  வருஷம்  நடக்குமானால்,  அதுவரை
நம்நாட்டு  ஆண் பள்ளிக்கூடங்களில் இங்கிலீஷ் பாஷை மூலமாகவே கல்விப்
பயிற்சி  நடந்து  வருமானால்  பிறகு  நமது நாட்டில் ஆண்களைக் காட்டிலும்
பெண்கள்   உயர்ந்த   கல்வியும்  அறிவுத்திறமையும்  சாஸ்திரப்  பழக்கமும்
பெற்றிருக்கும்படி  நேரிடும்.  அந்த  நிலை  ஏற்படும்  முன்னதாகவே ஆண்
பள்ளிக்  கூடங்களிலும்  சுதேச  பாஷைகளின்  பழக்கம்    அதிகப்பட்டுவிடு
மென்று நம்புகிறேன்."1

     பண்டித  மதன்  மோகன்   மாளவியா  அவர்கள்,   காசியில்   'இந்து
பல்கலைக்கழகம்'   ஒன்றை    நிறுவினார்.    இந்துக்களல்லாதாரும்   இதில்


1.'பாரதி தமிழ்'; பக் 177-178