பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 313

"வழுக்கி விழுந்தவர்"

      'தாசிகள்'  எனப்படுவோருக்கு  'வழுக்கி விழுந்தவர்' எனப்பெயர் தந்து,
அவர்களை   நல்வழிப்படுத்த காந்தியடிகள்  மிகுதியும்  அக்கரை காட்டினார்.
1919ல் வடபுலத்திலே நடைபெற்ற அகில இந்தியப் பெண்கள் மாநாடொன்றிலே
தாசிகளைச்  சேர்த்துக்  கொள்ள  மறுத்ததற்காக  அடிகள்  கண்டனக் குரல்
எழுப்பினார்.

      பிற்காலத்தில், விடுதலைப்போருக்கு  எதிரான  முகாமில்  முன்னணித்
தலைவர்களாக    விளங்கிய  ஈ.வே.ராமசாமி,   எஸ்.இராமநாதன்,   மூவலூர்
இராமாமிருதம்  அம்மையார்  போன்றவர்கள்  காங்கிரஸ்காரர்களாக  இருந்த
காலத்திலேயே சமூக சீர்திருத்தப் பணியிலே ஆர்வம் காட்டி வந்தனர்.

     1925ந்தாம்   ஆண்டு   மாயவரத்தில்   நடைபெற்ற    இசைவேளாளர்
மாநாட்டிலே,    தமிழ்ப்பெரியார்    திரு.வி.கலியாணசுந்தரனார்,    பெரியார்
ஈ.வே.இராமசாமி,  எஸ்.இராமநாதன்,  மூவலூர்   இராமாமிருத   அம்மையார்,
என்.தண்டபாணிப்பிள்ளை   ஆகிய   தேசியவாதிகள்  கலந்து  கொண்டனர்.
வழுக்கி விழுந்த பெண்களின் முன்னேற்றம்பற்றி இம்மாநாடு பெரிதும் கவனம்
செலுத்தியது.   ஆந்திர   தேசபக்தையும்   சமூக   சீர்த்திருத்தவாதியுமாகிய
திருமதி.யாமுனி  பூரணதிலகம்மா  என்னும்  பெருமாட்டியார்  மாயூரம் இசை
வேளாளர் மாநாட்டில் தலைமை தாங்கினார்.

டாக்டர் முத்துலட்சுமி

     வழுக்கி   விழுந்தவரின்   முன்னேற்றங்   கருதி,  பொட்டுக்கட்டுதலை
ஒழிப்பதற்காக,  தேசியப்  பெண்மணியான டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்
என்ற தேசபக்தையார் அப்போதைய சென்னை சட்டமன்றத்தில் ஒரு மசோதா
கொண்டு வந்தார்.  தேசியவாதிகளிலே முற்போக்கு மனம் படைத்தோர் அந்த
மசோதாவை    ஆதரித்தனர்.   தேசியப்    போர்வையிலே   மறைந்திருந்த
பிற்போக்காளர்கள்  மசோதாவை  எதிர்த்தனர். திரு.வி.க., பெரியார் ஈ.வே.ரா.
போன்ற தேசியவாதிகள் பொட்டு கட்டுதலை  ஒழித்தாக வேண்டுமென்பதிலே
உறுதி காட்டினர் .  திருமதி  முத்துலட்சுமியின்  முயற்சிக்கு  காந்தியடிகளும்
மனநிறைவுடன் வெளிப்படையாக ஆதரவு காட்டினார்.

      தேசியப்    பாசறையிலே     முன்னணியில் இடம் பெற்றிருந்த சிலர்
கலப்புத்    திருமணம்     செய்துகொண்டனர்.    அத்தகைய    திருமணங்