பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 317

இங்குக்   குறிப்பிடத்  தக்கவையாகும்.   இராவண  காவியம் காவிய மரபுக்கு
ஒத்ததாக  அமையவில்லையென்றாலும்,  அதன்  ஆசிரியருடைய   புலமைத்
திறன் போற்றத்தக்கதாகும்.

     பிரிட்டிஷ்  ஏகாதிபத்திய  எதிர்ப்புப்  பாசறையிலே  தேசிய   மகாகவி
சுப்பிரமணிய  பாரதியார்  தோன்றினா ரென்றால், சுயமரியாதை இயக்கத்திலே
பாவேந்தர்  பாரதிதாசன்  தோன்றினார்.  இந்த    இருபெருங் கவிஞர்களைத்
தோற்றுவித்த  பாசறைகளிடையே   பகை  நிலவிய  காலமுண்டு.   ஆயினும்,
தார்மீக  ரீதியில்  உறவும்  இருக்கக்  காண்கின்றோம்.  பாரதிதாசன்   தமது
பெயராலேயே  தான்  தேசியக்கவி  பாரதியாரின் வழித்தோன்றல் என்பதனை
உலகறியப்  புலப்படுத்தினார். தம்முடைய வாழ்நாள் முழுவதிலும் சுப்பிரமணிய
பாரதியாரிடம்  பக்தியும்  நன்றியும்  உடையவராக  விளங்கினார். இந்த உறவு
தமிழ் மொழிக்குப் பெருமை தருவதாகும்.