பொறுக்கக்கூடாததாயிருந்தது. காரியம் மிஞ்சிவிடுவதற்கு முன்னால் தமிழர்கள் விழிக்க வேண்டும் என்று உணர்ந்த சாஸ்திரியார் அப்போது கோவையில் இருந்த பூர்ணலிங்கம்பிள்ளையவர்களுக்கு, உடனே புறப்பட்டுச் சென்னைக்கு வரும்படி ஒருதந்தி அடித்தனர். மறுநாளே அவர் சென்னை வந்துசேர்ந்தார். இரண்டு நாட்களில் நடக்க இருந்த ஆசிரியர் சங்கக்கூட்டம் தான் இவ்வளவு அவசரத்திற்குக் காரணம். "இவ்விரு நண்பர்களும் ஆசிரிய சங்கத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் வாடகை வண்டியமர்த்திக் கொண்டு சென்று கண்டு அவர்களுக்கு உண்மை நிலையை விளக்கி வந்தனர். சங்கக்கூட்டத்தில் தாய்மொழியே வென்றது. சாஸ்திரியாரும், பிள்ளையவர்களும் பட்டபாடு பலனளித்தது. "இதோடு நில்லாமல், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றித் தந்தி மூலம் அனுப்பும்படிச் செய்தனர். இதன் முடிவாகத் தமிழ் கட்டாயமாகவே ஏற்படுத்தப்பட்டது" அன்று பூரணலிங்கம்பிள்ளையும், சாஸ்திரியாரும் தமிழ் காக்கும் முயற்சியில் ஈடுபடாமலிருந்தால், பல்கலைக்கழகப்படிப்பிலே தமிழ் மொழிக்கே இடம் இருந்திருக்காது. அதனை நினைத்துப் பார்க்கவும் நெஞ்சம் நடுங்குகின்றது. வடமொழிப் பற்றாளர் தமிழ்மொழிக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையால் தமிழர் அடைந்ததுயரை சாஸ்திரியாரே வருணிக்கக் கேட்போம்: "சிலர் சுதேசபாஷைகளை யொழித்துவிட்டு அவற்றிற்குப் பிரதியாக வடமொழி பயிலுதலே சிறந்ததென்று முழங்கிய முழக்கம் தென்னாடெங்கும் நடுக்கம் விளைத்தது. பண்டிதர் பலர் ஏங்குவாராயினர். சாமானிய ஜனங்கள் எல்லாம் துன்பக் கடலிலாழ்ந்தனர்; பலர் ஆங்காங்கு சபைகள் கூட்டிச் சுதேச பாஷைகளைச் சர்வ கலாசாலப் பரீட்சைகளினின்றும் நீக்கப்படாது போற்றிக் கொள்ளப்படல் வேண்டுமென்று விண்ணப்பங்கள் அராசாங்கத்தார்க்கு அனுப்பினர். 'இனி இந்திய துரைத்தனத்தாரவர்கள் உண்மையை உய்த்துணர்ந்து சென்னைச் சர்வ கலாசாலயார் விரும்பிய |