வாறே அவர்களது இஷ்டத்தை முடித்தருளுவார் என்று நம்புகிறோம்." தமிழ்மொழியின் தனித்தன்மையையும் உரிமைகளையும் காக்க அறிஞர் சாஸ்திரியார் ஆற்றியுள்ள பணிகளைத் தமிழுலகம் நன்றியறிதலுடன் என்றென்றும் போற்றி வரவேண்டும். எல்லைக் கிளர்ச்சி! 'மனோன்மணீயம்' நாடகாசிரியர் திருவனந்தபுரம் பி.சுந்தரம் பிள்ளையவர்கள் ஆங்கில மொழியில் பெறும் புலைமை பெற்ற எம்.ஏ.பட்டதாரியாயினும், தம் தாய்மொழியான தமிழிடத்து அளவற்ற பற்றும் அம்மொழியில் ஆழ்ந்த புலைமையும் பெற்று விளங்கினார். தமிழை ஒருமொழியாக மட்டுமன்றி, வழிபடும் தெய்வமாகவே கருதி, "தமிழ்த்தெய்வ வணக்கம்" பாடியுள்ளார். சுந்தரனார், மலையாள மொழி வழங்கும் கேரள நாட்டில் வாழ்ந்தாரெனினும், தம்தாய்மொழி தமிழேயென்பதையும், தமதாய் மாநிலம் தமிழ் நிலமேயென்பதையும் மறவாமல் மனத்துள் கொண்டிருந்தார். இதனை, - நீ பெறும் புதல்வரில் அடியேன் கடையேன் அறியாச் சிறியேன் கொடுமல யாளக் குடியிருப் புடையேன் ஆயினும் நீயே தாயெனும் தன்மையன் என்ற வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார். மலையாள மொழி வழங்கும் பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தென்பகுதிக்கு 'நாஞ்சில் நாடு' என்று பெயர். இதனை, 'நன்செய்நாடு' என்றும் அழைப்பர். இந்தப் பகுதியில் வாழும் மக்களில் மிகப்பெரும்பாலோர் தமிழர்களே. இது, ஒரு காலத்தில் பாண்டியர் ஆட்சியிலிருந்து, பிற்காலத்தில் சேர நாட்டுடன் இணைக்கப்பட்டது.1 'மனோன்மணீயம்' நாடகத்தில், சேரமன்னன் புருஷோத்த மனுக்கும் பாண்டி மன்னன் ஜீவகனுக்கும் பகையை வளர்க்கும் 1. இந்தப் பகுதியைத் தாய்த்தமிழ்நாட்டுடன் சேர்க்கவேண்டுமென்று திருவிதாங்கூர் தமிழ்மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் கிளர்ச்சி நடத்தினர். அதன் விளைவாக, 1946 நவம்பர் 1-ல் நாஞ்சில் நாடு தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நிகழ்ச்சி நாடறிந்ததாகும் . |