பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 5

     "தெலுங்கர் தமிழரை ஆண்ட அடையாளங்கள்  நமது  பாஷையிலும்
அகராதிகளிலும்  அழிக்க   முடியாதபடி  பதிந்து   கிடக்கின்றன .  நமது
சங்கீதமும் நாட்டியமும் தெலுங்கிலேயே இன்று வரை முழுகிக்கிடக்கின்றன.
பாடகர்கள்   பாடும்   கீர்த்தனங்களில்    உயர்தரமெல்லாம்  தெலுங்குக்
கீர்த்தனைகள் . தாசிகள்  ஆட்டத்தில் பாடும்  வர்ணங்கள்,  ஜாவாளிகள்
முதலியவற்றில்  நல்ல உருப்படி யெல்லாம்  தெலுங்கு. நமது  கிராமங்களி
லுள்ள  தெலுங்கு   ரெட்டிகளும் ,  நாயுடுமாரும் , ஆந்திர   பிராமணப்
புரோகிதர்களும் , தெலுங்கு   தாசிகளும் , ராயர்  சமஸ்தான   காலத்தில்
இங்கே  உறுதி பெற்றவர்கள். நமது  விவாக  காலங்களில்  பாடும் பத்யம்,
லாலி  முதலானவெல்லாம்  தெலுங்கு  முறை. நமது  பாஷையில் "கவனம்
(ஆழ்ந்து நோக்குதல்)", "ஜொகுஸு ",  "எச்சரிக்கை",  "துரை",  "வாடிக்கை",
" கொஞ்சம் "  முதலிய   பதிற்றுக்  கணக்கான   தெலுங்குச்   சொற்கள்
சேர்ந்திருக்கின்றன."1

    தமிழகத்தைத் தமிழர்களே ஆட்சி புரிந்த காலத்தில்   தமிழ் மொழிப்
புலவர்களே  அரசர்களுக்கு ஆலோசகர்களாக இருந்தனர்.   அவர்களிலே
அந்தணர்களும்  உண்டு . பல்லவர் , ஆந்திரர் ,   மராத்தியர்  ஆட்சிக்
காலங்களிலே  அந்தப் பழைய நிலைமையில் மாறுதல்  ஏற்பட்டது.  தமிழ்
அறியாத -தமிழகத்துப் பூர்வ குடியினர் அல்லாத- வடமொழிப்  புலவர்கள்
ஆளுவோர்  மீது  செல்வாக்குப்  பெற்று  விளங்கினர் .  விந்தியத்திற்கு
வடக்கேயிருந்து   மொகலாயர்   ஆதிக்கத்திற்குத்  தாங்கள்   அடிமைப்
படுவதைத்  தவிர்க்க , ஆந்திர  - மராத்திய ஆதிக்கங்களைத்   தவிர்க்க
முடியாத   தீமைகளாகக்  கருதித்  தமிழர்   ஆதரித்திருக்க   வேண்டும்.
தென்னகத்தின்   அரசியல்  வரலாற்றை   ஆராய்ந்தால் ,   தமிழகத்தில்
மூவேந்தர் ஆட்சி  வலுவற்றிருந்த காலத்திலோ , கிட்டத்தட்ட  மூவேந்த
ராட்சி ஒரு முடிவிற்கு வந்து கொண்டிருந்த  காலக்   கட்டத்திலோ தான்
ஆந்திர - மராத்திய  அரசுகள்  ஒன்றன்பின்   ஒன்றாகத்   தமிழகத்தில்
புகுந்தன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

      தமிழ் மூவேந்தர்  அல்லா  வேற்றுமொழி   மன்னர்கள்  ஆட்சிக்
காலத்திலேயும்  தமிழ்மொழி  வளர்ச்சி  அடைந்தது   உண்டு .  சமூகத்
துறையில் அல்ல; சமயத் துறையிலே!

'பொருள்' எங்கே?

     அறம்,  பொருள்,  இன்பம்,  வீடு  ஆகிய   நான்கும்  'புருஷார்த்
தங்கள்'  என்பர்  வடமொழிப்  புலவர்கள்.  இந்த   நான்கிலே   முதல்