6 | விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு |
மூன்றும் தமிழ் மக்களால் தொன்றுதொட்டே போற்றப்பட்டு வந்துள்ளன. 'தமிழ் மறை' எனப்படும் திருக்குறள் , அறத்திலே துவங்கி, இடையில் பொருளைப் புலப்படுத்தி , இறுதியில் இன்பம் இதுவெனக் காட்டி முடிகின்றது. நான்காவதான 'வீடு' பற்றிப் பேச்சே இல்லை. திருக்குறளை அடியொற்றிப் பிறந்த சிலப்பதிகாரத்தின் நிலையும் இதுதான். சிலப்பதிகாரக் காலம்வரை தமிழரால் வீட்டின்பம் வெறுக்கப்பட்டது என்றும் சொல்வதற் கில்லை . தொல்காப்பியத்திலேயே வீடுபற்றிய குறிப்பு உண்டு . 'எட்டுத் தொகை'யிலும் 'பத்துப்பாட்டி'லும் வீட்டு நெறி இலைமறை காயென இடம் பெற்றிருக்கிறது. ஆனால், வீட்டின்பத்தினை, சமுதாயம் முழுவதற்குமான பொதுத் தேவையாகவோ , தவிர்க்க முடியாத - தவிர்க்கவும் கூடாத- அத்தியாவசியத் தேவையாகவோ தமிழர் கருதவில்லை. அதனைத் தனி நபரின் விருப்பதிற்கு விட்டு விட்டனர். கோடிக்கு ஒருவரே விரும்பத்தக்க கொள்கையாகவும் பண்டைத் தமிழர் எண்ணியிருக்கலாம். அறம்-பொருள் - இன்பம் ஆகிய மூன்றும் முழுமையாகக் கை கூடினால் , நாலாவதான வீட்டின்பம் தானாகவே வந்து எய்தும் என்றும் அவர்கள் கருதி யிருக்கலாம். அதனால், 'வீடு' பேற்றைப்பற்றி நூல் எழுதவில்லை. மணிமேகலையும் அதற்குப் பின் தோன்றிய தமிழ் இலக்கியங்களும் முதல் மூன்றோடு நான்காவதான வீடு பேற்றினையும் சேர்த்துப் புருஷார்த்தங்கள் நான்கினையும் வலியுறுத்தின. சற்றேறக் குறைய கம்பர் காலம்வரை இந்நிலை நீடித்தது . பின்னர் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. வேற்றினத்தவரான ஆந்திரரும் மராத்தியரும் தமிழகத்தின் மீது அரசியல் ஆதிக்கம் பெற்றிருந்த காலங்களிலே , தத்தம் மொழியைத் தமிழர்மீது அவர்கள் திணிக்கவில்லை என்றாலும் , சமஸ்கிருதத்தின் செல்வாக்கைவிரும்பியோ,விரும்பாமலோ வளர்த்தனர். ஆம்; மொகலாயரின் ஆதிக்கத்திற்கு அடிமைப்படாமல் தமிழகத்தைக் காக்க வந்த அவர்கள் வடமொழி ஆதிக்கத்தை நிலை நாட்டிவிட்டனர். புலவர்களிலே பலர் , வேற்றுமொழி அரசர்களுடைய நல்லெண் ணத்தையும் உதவியையும் பெறும் பொருட்டு , தமிழ் மொழியின் தனித்தன்மையைக் காக்கத் தவறினர்; தமிழ் இனத்தின் தனித்த பண்பாடுகளையும் போற்றாது விடுத்தனர் . மொகலாயரின் ஆதிக்கம் வந்துவிடுமோ என நினைத்து நடுங்கும் நிலையில் இருந்த தமிழர்கள் - ஆந்திரரையும் மராத்தியரையும் மதத்தால் தம்மவர் எனக் கருதி - அரசியல் உரிமையை இழந்த நிலையை அமைதியாக ஏற்றுக் |
|
|
|