கொண்டுவிட்டனர் . மொகலாயரின் படையெடுப்பிலிருந்து காக்கப் பட வேண்டியது மதமொன்றே என நினைத்தார். இந்தநிலையில் , தமிழ் இலக்கியத் துறையிலும் அடிமை முடைநாற்றம் வீசத் தொடங்கியது . தமிழ்ப் புலவர்கள் , சாதாரணப் பொது மக்களுக்கு அறநெறிகளைப் போதிக்க நீதி நூல்களைப் படைத்தார்கள் . வீடு பேற்றினைத் தேடியலையப் புராண நூல்களையும் இயற்றினார்கள். ஆனால், 'பொருள் நூல்' இயற்றினாரல்லர். ஆந்திரர் - மராத்தியர் ஆட்சிக்காலங்களில் மட்டுமன்றி , அவற்றை அடுத்துத் தோன்றிய மொகலாயர் (நவாபுகள்) ஆட்சியின் போதும் தமிழ் மொழியின் வளர்ச்சி தடைப்பட்டதோடு , பாரசீகம் அல்லது உருது மொழியின் செல்வாக்கு ஓங்கியது . தமிழகப் பூர்வகுடிகளின் அன்றாட வாழ்க்கையிலே , ரஸ்தா - கிஸ்தி - தாசில் - ஜமாபந்தி என்பன போன்ற வேற்றுமொழிச் சொற்கள் அரசியல் துறையில் வழங்கலாயின . அவை, மொகலாயர் ஆட்சி மறைந்த பின்பு இன்றுங்கூட தமிழோடு 'தமிழா'கப் பேச்சு வழக்கில் கலந்திருக்கக் காண்கின்றோம் . ஆந்திரர், மராத்தியர் ஆட்சியிலே தமிழ் மொழியைத் தாழ்த்திச் சமஸ்கிருதமொழி தலை எடுத்த தென்றால் , மொகலாயர் ஆட்சியிலே , தமிழ் - சமஸ்கிருதம் ஆகிய இரண்டும் ஒடுக்கப்பட்டு , பாரசீகம் தலை தூக்கி நின்றது .காரணம் , அது ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்பட்டதுதான் . இன்னொரு காரணமும் உண்டு . அதாவது , தமிழ் இனத்தவர்களில் தாழ்த்தப்பட்டுக் கிடந்த மக்களிலே இலட்சக்கணக்கானவர்கள் அணிஅணியாக இஸ்லாம் சமயத்தைச் சார்ந்ததாகும். இந்த மதமாற்றம் காரணமாகவும் தமிழரிலே ஒரு சாராருக்கு வேற்று மொழியே வீட்டு மொழியாகவும் கலாச்சார மொழியாகவும் அமைந்துவிட்டது. பின்னர், ஆங்கிலேயர் ஆதிக்கம் நம் தமிழகத்தில் அமைந்த போது, அவர் தம் சொந்த மொழியான ஆங்கிலம் ஆட்சி மொழியானது. நாளடைவில் ஆரம்பக் கல்வி தொட்டு உயர்தரக் கல்வி வரை ஆங்கிலமே பயிற்று மொழியாகவும் பயன்படுத்தப்பெற்றது . கல்விமுறை முழுவமே ஆங்கில பாணியில் அமைந்தது. ஆங்கிலம் கவர்ச்சிகரமான நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும் ஐரோப்பியர் களின் மொழியாக விளங்கியதால், அன்னியர் ஆட்சியிலே உத்தியோகம் பெற வேண்டுமென்ற ஆர்வத்தால் மட்டு மல்லாமல், நவீன நாகரிகத்திலே கொண்ட மோகத்தாலும் தமிழர் ஆங்கில மொழிக்கு அடிமைப்பட்டனர். துவிபாஷிகள்! தமிழர் சமுதாயத்திலே , முன்னணியிலிருந்த உயர் சாதியினரிலே சிலர், ஆளுவோரான ஆங்கிலேயர்களுக்கும் அடிமைப்பட்டிருந்த |