போர்த்துகீசியம்-தமிழ்-லத்தீன் அகராதி ஒன்றையும் அமைத்துக் கொடுத்தார். 4400போர்த்துகீசியச் சொற்களுக்கு விளக்கம் தந்தார். சதுரகராதி ஒன்றையும் உருவாக்கித் தந்தார். இதுவே, பிற்காலத்தில் தோன்றிய தமிழகராதிகளுக் கெல்லாம் மூலமாகும். திருக்குறள் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் லத்தீன் மொழியில் பெயர்த்தெழுதினார். கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் விளக்கம் தொன்னூல் விளக்கம் ஆகிய நூல்களை இயற்றினார். முதல் மூன்று நூற்களையும் இலத்தீனில் எழுதினார். தமிழில் உரைநடை நூற்களையும் இயற்றி "தமிழ் உரை நடையின் தந்தை" எனும் சிறப்புப் பெயரைப் பெற்றார். 'பரமார்த்த குருகதை' என்பதும் அவர் படைப்பாகும். டாக்டர் ஜி.யூ.போப் 19-ஆம் நூற்றாண்டிலே தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட கிறித்துவப் பாதிரிமார்களிலே ஜி.யூ.போப் அவர்கள் முக்கியமானவராவார். இவரை 'போப் ஐயர்' என்றே அழைப்பர் புலவர் பெருமக்கள். தமிழிலுள்ள சிறந்த காப்பியங்கள், நீதி நூல்கள் ஆகியவற்றிலிருந்து 612 செய்யுட்களைத் தேர்ந்தெடுத்து, தமிழ்ச்செய்யுட் கலம்பகம் வெளியிட்டார். ஒவ்வொரு செய்யுளின் கருத்தையும் சுருக்கமாக ஆங்கிலத்திலும் கொடுத்தார். பரிதிமாற் கலைஞரின் "தனிப்பாசுரத் தொகை" என்னும் கவிதை நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதினார். 'நாலடியார்' என்னும் நூலையும் ஆங்கிலத்தில் பெயர்த்தார். கிறிஸ்த்துவ மதத்திற்குச் செல்வாக்கு தேடத் தமிழகம் வந்த பாதிரிப் பெருமகனாரான ஜி.யூ.போப், சைவ சாத்திரமான சிவஞான போதத்தையும், சைவதோத்திர நூல்களுள் தலைசிறந்ததான திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகுக்கு வழங்கினார். தமிழகத்தில் தொடர்ந்தாற்போல் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து பண்டிதர் முதல் பாமரர் வரையுள்ள ஆயிரக்கணக்கான தமிழ |