உணர்த்தினார். தன்னேரில்லாத் தனி மொழியான தமிழும் வடமொழியின்
கிளை மொழியே என்று வம்பளந்து வந்தவர்களை வாயடைக்கச் செய்தார்.
உயர் ஆரியம்போலத் தமிழும், தெலுங்கு -கன்னடம்-மலையாளம் ஆகிய
சேய்மொழிகளின் தாய்மொழி என்பதனை ஆராய்ச்சி செய்து
நிலைநாட்டினார். வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ் உரிமைப்போர்
நடத்திய பரிதிமாற் கலைஞர் போன்ற பெரும் புலவர்களுக்கு கால்டுவெல்
இயற்றிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் மிகச்சிறந்த
கேடயமாக விளங்கியது எனலாம்.
கிறித்துவ மிஷினரிகள் இந்தியத் தமிழகத்திற்கு வருகை தந்தது, தமிழ்
வளர்க்க அல்ல; தங்கள் மதம் வளர்க்கவே! ஆயினும், தங்கள் சமயத்
தொண்டைத் திறம்படச் செய்வதற்குப் பொதுமக்களுடன் நெருங்கிய
தொடர்பு கொள்வது அவசியமென்பதனை உணர்ந்ததன் விளைவாக,
அவர்கள் தமிழ் பயில முயன்றனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார்
இந்தியப் பெருநில முழுவதிலும் அரசியல் ஆதிக்கம் செலுத்திய காலமாகும்.
வெள்ளை நிறத்தவரான கிழக்கிந்தியக் கம்பெனி ஆங்கிலேயர்கள் இந்திய
மக்களுக்கிழைத்த கொடுமைகள் கொஞ்சமன்று. பாளையக்காரர்கள் போர்
தோல்வியுற்றுப் பரங்கியர் ஆட்சி நிலை பெற்றிருந்த சூழ்நிலையில்தான்
ஜி.யூ.போப், ராபர்ட்கால்டுவெல் போன்ற பாதிரிமார்கள் தமிழகத்திலே
தங்கித் தமிழ்த்தொண்டு புரிந்தனர். கிழக்கிந்தியக் கம்பெனி
வெள்ளையர்கள் இழைத்த பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக அமைந்தது
பாதிரிமார்கள் செய்த தமிழ்த்தொண்டு.
1835வரை இந்தியாவில் அச்சகம் நடத்த இந்திய மக்களுக்கு உரிமை
வழங்க மறுத்தது அந்நாளிலிருந்த கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி.
அதனால், வெள்ளை நிறத்தவரான கிறித்துவ மிஷனரிகள், பள்ளிக் கூட
பாடப்புத்தகங்களையும் பிற தமிழ் நூற்களையும் வெளியிட ஏகபோக
உரிமை பெற்றிருந்தனர். தமிழிலே இலக்கிய நூல்கள் வெளியிட்டதிலே,
பாடப்புத்தகங்கள் பிரசுரித்ததிலே, பத்திரிகைகள் நடத்தியதிலே கிறித்துவ
மிஷனரிகள் வரலாற்றிலே முதலிடம் பெற்றிருக்கக் காரணம், அச்சகம்
நடத்தும் உரிமை 1835 வரை வெள்ளையர்களுக்கு மட்டுமே இருந்ததுதான்.
தடை நீக்கப்பட்டு, அச்சகம் நடத்த இந்தியர் உரிமை பெற்ற பின்னரும்,