நீண்டகாலம்வரை பள்ளிக்கூட பாடப்புத்தங்களையும் கிறித்துவமத ஆதரிப்பு-
எதிர்ப்புப் பிரசுரங்களையுமே சுதேசிகள் வெளியிடலாயினர். பிரிட்டிஷ் பாதிரிமார்களில் பெரும்பாலோர் கிழக்கிந்தியக் கம்பெனி
ஆட்சியாளருக்கு ஆதரவாளர்களாகவே இருந்து வந்தனர். ஆம்; தமிழ்
மொழியை வளர்க்கப் பாடுபட்ட அன்னார், தமிழ் இனத்தின்-தமிழ் நாட்டின்
அடிமைத்தனத்தை அகற்றவோ, ஆட்சி புரிந்த வெள்ளையர்கள்
மக்களுக்கிழைத்த கொடுமைகளை எதிர்க்கவோ முன்வந்ததாகச் செய்தி
இல்லை.
இதற்கு மாறாக, விடுதலைவேட்கை கொண்டு, கிழக்கிந்தியக் கம்பெனி
ஆதிக்கத்தை எதிர்த்து முதல் முழக்கம் செய்த வீரபாண்டியக்
கட்டபொம்மனை 'கொள்ளைக்காரன்' என்று வருணித்து, அவன் மீது பொய்க்
குற்றங்களைச் சுமத்தி நூலெழுதினார் ராபர்ட்கால்டுவெல். அந்நூலின் பெயர்
'திருநெல்வேலிச்சரித்திரம்' என்பதாம். "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்"
எழுதி, தமிழ் மொழிக்குப் பெருமை தேடிய கால்டுவெல் பாதிரியாரே,
தமிழினத்துக்குப் பெருமை தேடியசுதந்திர வீரனுக்கு மாசு கற்பித்துநூலெழுதி,
தமது புனித வரலாற்றையும் மாசுபடுத்திக் கொண்டுவிட்டார்.
பாதிரிகளும் பரங்கி மொழியும்
ஆதிகாலந்தொட்டே, தமிழகம் வந்த புறச்சமயத்தினர், தமிழ் பயின்று,
தாங்கள் பெற்ற தமிழ்ப்புலமையால் தமிழ் மக்களைக் கவர்ந்து, அவர்களோடு
தொடர்பு கொண்டு, தங்கள் மதங்களை வளர்த்துள்ளனர். இப்படி ஆரியர்,
சமணர்,பௌத்தர் ஆகியவர்கள் தமிழகம் புகுந்தபோது என்ன செய்தார்களோ,
அதையே அவர்களை விடவும் திறமையாகச் செய்தனர் கிறித்துவப்
பாதிரிமார்கள். அவர்களுக்கு, இந்தியாவில் ஆதிக்கம்பெற்றிருந்த ஆங்கிலப்
பேரரசு முழு அளவு ஆதரவு புரிந்ததோடு அன்னியர்களான அவர்களுக்கு
இந்த நாட்டில் எத்தகைய இடையூறுகளும் இன்னல்களும் நேரிடாதவாறு
பாதுகாப்பளித்தும் வந்தது. இந்நிலையில், தமிழ்த் தொண்டு புரிந்த ராபர்ட்
கால்டுவெல் போன்ற பிரிட்டிஷ் பாதிரிமார்கள் தமிழர் மீது ஆதிக்கம்
செலுத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக்கு ஆதரவாக
இருந்தது இயற்கைதானே!
கிறித்துவ மதப்பிரசாரத்தை மிஷனரிகளின் மொழியான
ஆங்கிலத்தில் நடத்துவதா, இந்தியர் மொழிகளான தமிழ் போன்ற