ஏதேனும் உண்டென்றால், அது, ஆண்டுதோறும் கூடிய மகாசபைக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்ட தலைமையுரைகளின் தொகுப்புநூல் எனலாம். அந்த நூல்கூட இதுவரை நம் தாய்மொழியான தமிழிலே மொழி பெயர்க்கப்படவில்லை. ஆம், இன்று நாடு அனுபவிக்கும் விடுதலை வாழ்வைத் தேடித் தந்த மகாசபையின் முன்னோடித் தலைவர்களின் கருத்தோவியங்கள் கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக ஆங்கில மொழியிலேயே சிறைப்பட்டுக் கிடக்கின்றன. அதனால், ஆங்கிலமறியாத தமிழர் அவற்றைப் படித்து தங்கள் வரலாற்று ஞானத்தை வளர்த்துக் கொள்ள வழியில்லை. தாய்மொழிப் பற்றுடனும் இலக்கிய ஆர்வத்துடனும் இந்திய விடுதலைப்போரின் மூன்றாவது கட்டத்தைப் பார்ப்போமானால், அது ஒரு இருண்ட காலமாகவே தோன்றும். இந்த நிலையில் ஆங்கிலமோகம் என்னும் காரிருளிலிருந்து தாய் மொழிப்பற்று என்னும் பேரொளிக்குக் காங்கிரசைக் கொண்டுவந்த பெருமைக்குரியவர் லோகமான்ய பாலகங்காதர திலகரேயாவார். படித்துப்பட்டம் பெற்றவர்களுக்கு வேலை தேடித்தரும் அமைப்பாக விளங்கிய தேசிய காங்கிரஸ் மகாசபையை, கோடானு கோடிபாமரர்கள் உள்ளிட்ட பாரதசமுதாயத்தினர்அனைவருடைய விடுதலைக்காகவும் பாடுபடும் வீரர்களின் பாசறையாக மாற்றினார் திலகர்பெருமான்.அதற்காக அவர் செய்த முதல் முயற்சி ஆங்கிலம் அறியாதவர்களும் காங்கிரசில் சேர்ந்து முன்னணித் தலைவர்களாக விளங்குமளவுக்கு அம்மகாசபையின் அமைப்பு விதிகளை மாற்றியதாகும். காங்கிரஸ் மகாசபையின் மாநிலக் குழுக்களை மொழி அடிப்படையில் திருத்தி அமைத்தார் திலகர். அதற்கு முன்பு தமிழ்-தெலுங்கு -கன்னடம்-கேரளம் ஆகிய நான்கு மொழிகள் வழங்கும் பழைய சென்னை ராஜ்யம் தனி மாநிலமாக அமைந்திருந்தது. அதனைத் திருத்தி, தமிழ்மொழி வழங்கும் பிரதேசத்தைத் தனியொரு காங்கிரஸ் மாநிலமாக விளங்கச் செய்தார் திலகர். இந்தப் புரட்சிகரமான மாறுதல்களைச் செய்ய லோகமான்ய திலகருக்கும் அவரைத் தலைவராகக் கொண்ட தீவிரவாதிகளுக்கும் 1905 முதல் 1918ஆம்ஆண்டுவரை உருவாகியிருந்த சந்தர்ப்ப சூழ்நிலை சாதகமாக அமைந்தது. அன்னிய மொழியில் கல்வி பயின்று பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கூடி, பொதுமக்களோடு தொடர்பின்றி நடத்தும் எந்த ஒரு
|