போரில் இரண்டறக் கலந்தார்கள். இதன் விளைவாக, பிரதேசமொழிகளில் நாளிதழ்களும் வாரஇதழ்களும் மாதஇதழ்களும் வெளிவரலாயின. விடுதலைப் பிரச்சாரப்பிரசுரங்களும் நூல்களும் மாநிலமொழிகளில் வெளிவரத் தொடங்கின. இந்த எழுச்சிக்குத் தமிழகம் விலக்காக இல்லை. வளமார் தமிழ்மொழி- நம்தாய்மொழி - விடுதலைப் போர் வீரர்களின் வலிமை மிக்க கருவியாகப் பயன்பட்டது. திலகர்சகாப்தத்தின் துவக்கித்திலேயே தமிழ்மொழி விடுதலை வீரர்களின் கேடயமாகிவிட்டது. தமிழன்னை ஒரு மகாகவியைத் தந்தாள். அவர்தான், எட்டயபுரம் சி.சுப்பிரமணிய பாரதியார். தாம் தோன்றிய காலம் பற்றியும் தம்மைத் தோற்றுவித்த சக்தி பற்றியும் பாரதியார் கூறக் கேட்போம்: “இனிய நிலவின் ஒளியால் விழுங்கப்பட்டு உலகம் அவாவும் மன கோசரமாகிய ஸௌந்தர்யத்தைப் பெற்றிருக்கும் சமயத்தில் ஒவ்வொரு கவிஞனுடைய உள்ளமும் தன்னை அறியாது குதூஹலமடைகின்றது. சூரியன் உதித்தவுடனே சேதனப் பிரகிருதி மட்டுமேயன்றி, அசேதனப் பிரகிருதியும் புதிய ஜீவனையும் உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. “இவற்றினை யொப்பவே, நாட்டில் ஓர் புதிய ஆதர்சம்- ஓர் கிளர்ச்சி- ஓர்தர்மம்-ஓர்மார்க்கம் தோன்றுமேயானால்,மேன்மக்களின் நெஞ்சமனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்தி மலர்போல, அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன. “சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய “தேசபக்தி” என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங்களிலே குறைவுடையவனாகிய யானும் தேவியினது கிருபையால் அப்புதியசுடரினிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்பு காரணமாகச் சென்ற வருஷம் சில கவிதை மலர் புனைந்து, மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன். நான் எதிர்பார்த்திராத வண்ணமாக, மெய்த்தொண்டர்கள் பலர் “இம்மலர்கள் மிக நல்லன” என்று பாராட்டி, மகிழ்ச்சியறிவித்தார்கள். மாதாவும் அதனை அங்கீகாரம் செய்துகொண்டாள். இதனால் துணிவு மிகுதியுறப் பெற்றேனாகி, மறுபடியும் தாயின் பாதமலர்க்குச் சில புதிய |