மலர்கள் கொணர்ந்திருக்கிறேன். இவை மாதாவின் திருவுள்ளத்திற்கு மகிழ்ச்சியளிக்குமென்றே நினைக்கின்றேன். குழிலினிது யாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர் என்பது வேதமாதலின்1 இதிலே, தம்மைக் கவிஞனாக்கிய சக்தி 1906 முதல் 1908 வரை குமரி தொடங்கி இமயம்வரை கிளர்ந்தெழுந்த தேசவிடுதலைப் புரட்சிதான் என்கிறார் பாரதியார். தாம்மட்டுமல்லாமல், நல்லோர்பலரின் சிந்தைகளெல்லாம் புளகாங்கிதமுற்று, அவர்களெல்லாம் கவிஞர்களாகவும், பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் மாறினர் என்றும் கூறுகின்றார். இதனால், தமிழும் தேசியமும் உறவுகொண்டு ஒன்றையொன்று வளர்க்கத் தொடங்கின. இந்த உறவு ஏற்பட்டில்லையேல், தமிழ் மொழியானது பழைய போக்கிலேயே வளர்ந்திருக்கும்; வாழ்ந்திருக்கும். ஆம்; மக்கள் மொழியாக அல்லாமல், மதங்களின் மொழியாக! காலம் தந்த கவிஞர் சிறுவனாக இருந்த காலத்திலேயே பாரதியார் கவி இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார் என்று அறிகின்றோம். இந்திய விடுதலைக்கான முயற்சி கிளர்ச்சியாகப் பரிணமித்த 1906 ஆம் ஆண்டு முதற்கொண்டு அவர் தேசியக் கவியாகக் காட்சியளித்தார். அவர் தேசியக் கவிஞராகும்வரை தமிழிலே பாரத தேசம் முழுவதையும் - பாரத சமுதாயம் அனைத்தையும் வாழ்த்துகின்ற, வருணிக்கின்ற தேசியக் கவிதைகள் இல்லை. சுப்பிரமணிய பாரதியார், தாமும் தேசியக் கவிஞராக முடியும் என்ற நம்பிக்கை தமக்கு ஏற்படாத காலத்திலே, பழைய இலக்கியங்களிலிருந்து தேசிய உணர்வூட்டும் செய்யுட்ளைத் தொகுத்து மாலையாக்கி, பாரதத்தாய்க்கு அணிவிக்க முயன்றிருக்கிறார். அதனை அவரது வாக்காலேயே அறிவோம்: “எமது தாய் நாடாகிய பாரதாம்பிகையின் பெருமையை வருணித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பல்வேறு காலத்துப் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள் மணிகளை ஓர் மாலையாகப் புனைந்து பதிப்பிக்கக் கருதியிருக்கின்றேனா 1. “ஸ்வதேச கீதங்கள்” 2-ம் பாகம் ஸமர்ப்பணம் |