தலின் பண்டைத் தமிழ்நூல்களில் பாரதநாடு முழுதினையும் ஒருங்கே புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பாடல்களை அறிஞர் தெரிந்தனுப்பு வார்களாயின் அவர்மாட்டு மிக்க கட்டுப்பாடுடையவனாவேன்.” “தமிழ்ப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாட்டுப் படலங்களில் நிடதம் கோசலம் முதலிய பகுதிகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் வருணனைகள் பயன்படமாட்டா. தற்காலத்தே தமிழ்ப் புலமையிற்சான்று விளங்கும் பெருமக்கள் புதியனவாக ‘தேசபக்திப்பாக்கள் புனைந்தனுப்பு வாராயின்அவையும் நன்றியறிவுடன் ஏற்றுக் கொள்ளப்படும்.”1 பாரதியார் இந்த வேண்டுகோளை வெளியிட்டது 1906 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலாகும். இந்த வேண்டுகோளின்படித் தேசியக் கவிதைகள் கிடைத்து, அவற்றைத் தொகுத்து நூல் வடிவில் பாரதியார் வெளியிட்டதாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக, அவரே தேசியக் கவியாகிவிட்ட அற்புதத்தைக் காண்கிறோம். இந்திய விடுதலைப் போரில் 1905 முதல் 1920 வரையுள்ள காலகட்டம் ‘திலகர்சகாப்த’ மாக மட்டுமல்லாமல், தமிழ் அளவில் ‘பாரதிசகாப்தம்’ என்று சொல்லத்தக்கதாகவும் அமைந்துவிட்டது. அந்தக் காலத்தில்தான் நம் அன்னைமொழி தேசபக்தியோடு - தேசிய ஒருமைப்பாட்டோடு உறவு கொள்ளுகின்றது. ஆம்; மன்னர்களையும் மதங்களையும் மதக் கடவுளர்களையுமே புகழ்ந்து பாடிய புலவர் பரம்பரை வழிவழி வந்த நாட்டிலே, தேசத்தைப் புகழும் தேசமக்களைப் போற்றும் தேசியக் கவிஞர் பரம்பரை தோன்றியது. அந்தப் புதிய பரம்பரையின் முதல்வர்- முன்னோடி சி.சுப்பிரமணியபாரதியார். பாரதியார், திலகர் சகாப்தத்தில் புதிதாகத் தோன்றிய தேசபக்தியைப் பயன்படுத்தி, தமிழை வளர்த்தார்; தமிழைப் பயன்படுத்தி மக்களிடையே தேசபக்தியை வளர்த்தார். ஆம் தேசியமும் தமிழும் ஒன்றோடொன்று உறவு கொண்டன. ஒன்றையொன்று வளர்த்தன. மடங்களிடமிருந்தும் புலவர்களிடமிருந்தும் தமிழை மீட்டு, மக்கள் மடியிலே தவழவிட்டார் பாரதியார். தேசபக்திப் பாடல்கள் “தமிழ்ப் புலவர்களில் யாரேனும் பண்டை இலக்கியங்களி லிருந்து தேசபக்திச் செய்யுட்களைத் தொகுத்து மாலையாக்கி, பாரத 1.திரு.பெ.தூரன் எழுதிய ‘பாரதி தமிழ்’ ;பக்-12. |