பக்கம் எண் :

72விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

அன்னைக்கு  அணிவிப்பார்களா?  பண்டை  இலக்கியங்களில்  தேசபக்தி
மணக்கும்  செய்யுள்களில்லையானால்,  தன்  காலத்துப்  புலவர்களேனும்
புதிதாகத் தேசியகீதம் புனைந்து  தருவார்களா?” -   என்று எதிர்பார்த்து
ஏமாந்த   பாரதியார்,   தாமே   தேசியக்கவியாக  மாறினார்.  தேசபக்தி
மணக்கும்  பாடல்களை எழுதிக்  குவித்தார். அந்தப் பாடல்களின் முதல்
தொகுப்பை  “ஸ்வதேச கீதங்கள்”  என்னும்  பெயரில்  1908 ஜனவரியில்
வெளியிட்டார். அந்தத் தொகுப்பில் அடங்கிய பாடல்கள் வருமாறு:

                    வந்தே மாதரம்
                    வந்தே மாதரம்(மொழிபெயர்ப்பு)
                    நாட்டு வணக்கம்
                    எங்கள்நாடு
                    நடிப்புச் சுதேசிகள்
                    தொண்டு செய்யும் அடிமை
                    மேத்தா திலகருக்குச் சொல்வது
                    லாஜபத்ராய் துதி
                    லாஜபத்ராய் பிரலாபம்
                    தாதாபாய் நவுரோஜி
                    பூபேந்திர விஜயம் சுதந்திரப் பெருமை
                    மாஜியினின் பிரதிக்கினை
                    புது வருஷம்

     இந்தப்   பாடல்களில்  ஒவ்வொன்றும்  தேசத்தைப்  போற்றும் - தேச
விடுதலையைக் கோரும்-தேசவிடுதலைப் போரின் நிகழ்ச்சிகளை வருணிக்கும்
தேசியப்பாடல்களாகும் இந்தத் தொகுப்பு வெளியானதும் தமிழுக்குப் புதுயுகம்
- புதுயோகம் பிறந்துவிட்டது!

     ‘மாஜினியின்  பிரதிக்னை’   என்ற  பாடல்,  இத்தாலி  நாட்டுத்  தேச
பக்தர்களின் தலைவரான  மாஜினி என்பாரின் சூளுரையாகும். தமிழ்ப் பாவலர்
ஒருவர், இந்திய  உபகண்டத்துக்கு வெளியேயுள்ள  ஒருநாட்டை - அந்நாட்டு
மக்களை-அம்மக்களின்  உரிமை  வேட்கையைப் புகழ்ந்து பாடிய முதற்பாடல்
இதுதான்.  இந்தப்பாடல்  தமிழுக்கு  ஒரு  புதிய  வரவு!  தமிழ்  இலக்கியக்
களஞ்சியத்திலே சேர்க்கப்பட்ட ஒரு புதிய சொத்து!

     இந்தத்    தொகுப்பு    நூலை   வெளியிட்டதோடு   நம்   புதுமைக்
கவி  ஓய்ந்துவிடவில்லை   அவரது   இதயமும்    மூளையும்   வறண்டுவிட