பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 73

வில்லை. முதல்தொகுப்பு வெளியான ஒரே ஆண்டிற்குள் அதன் இரண்டாவது பாகமாக  “ஜன்ம பூமி”   என்னும்  பெயரில்  1909ல்  மற்றொரு  தொகுப்பு
நூலை வெளியிடுகின்றார். அதிலடங்கிய பாடல்கள் வருமாறு:

     ஜாதீய கீதம் (மொழிபெயர்ப்பு)
     ஜய பாரத!
     பாரத தேவியின் திருத்தசாங்கம்
     மாதாவின் துவஜம்
     எங்கள் தாய்
     தொண்டு செய்யும் அடிமை
     நிதானக் கட்சியார் சுதேசியத்தைப் பழித்தல்
     கலெக்டர் வின்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல்
     கலெக்டர் வின்ச்சுக்கு ஸ்ரீசிதம்பரம்பிள்ளை சொல்லியமறுமொழி
     பாரத தேவியின் அடிமை
     அபேதாநந்த ஸ்வாமிகளின் மீது ஸ்தோத்திரக் கவிகள்
     சுதந்திரப் பெருமை
     சுதந்திர தாகம்
     சுதந்திரப் பள்ளு
     சுதந்திர தேவியின் துதி
     ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்

     முதல்தொகுப்பில்  தேசபக்தி  மட்டுமே மணந்ததென்றால் இரண்டாவது
தொகுப்பில்  தேசபக்தியும்  தெய்வபக்தியும்  கலந்து மணக்கக்  காண்கிறோம்.
ஆம்;    அடிமைப்பிணி    தீர்க்கத்தோன்றிய   மருத்துவரான   பாரதியார்,
தேசப்பற்று   என்னும்  மருந்தை  முதலில்   வழங்கி,  அது  போதாதென்று
கருதியவர்போல,  தேசபக்தியோடு   தெய்வபக்தியையும் குழைத்துத்  தந்தார்.
பாரதநாட்டை தாயாகக் கற்பித்து, அந்தத்  தாயையும் தெய்வமாகப்  பாவித்து,
“பாரததேவியின்  திருத்தசாங்கம்”,  “எங்கள் தாய்”  ஆகிய   பாடல்களைப்
பாடி வழிபடுகின்றார்; நம்மையும் வழிபட வைக்கின்றார். ‘சுதந்திரம்’  என்னும்
அரும்பொருளை   ‘தேவி’யாகக்  கற்பனை செய்து, ‘சுதந்திர தேவியின் துதி’
பாடியுள்ளார்.

     பிற்காலத்தில்    விடுதலை    வீரர்களின்  பாசறையாக    விளங்கிய
இந்திய   தேசிய  காங்கிரஸ்  மகாசபை,   ஆரம்ப   ஆண்டுகளிலே அரச
பக்தியையும்   உத்தியோக     பக்தியையுமே   வெளிப்படுத்தியது.    தேச
பக்தியையோ,   தெய்வ   பக்தியையோ,   இரண்டுங்  கலந்த    தெய்வீகத்