பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 89

கொடுங்கோன்மைக்கு இலக்கணங் கூறும் குறட்பாக்களை எங்கு சொன்னால்
வள்ளுவருக்குப்   பெருமை  ஏற்படுமோ,   அங்கு  சொன்னார். அதனால்,
ஆங்கில   நீதிபதி  சினங்கொள்வார்,  தண்டனை  அதிகப்படலாம் என்று
தெரிந்திருந்தும், அவருடைய தமிழ் நெஞ்சம் அஞ்சவில்லை. சிவனார் தந்த
நீண்ட வாக்குமூலத்திலே குறட்பாக்களைச் சான்று காட்டும் பகுதி வருமாறு:

      ‘இம்மண்ணிலே பிறந்து வளர்ந்த மக்களுக்கு அல்லாமல் வாழ வந்த
வெள்யைர்களுக்கே அதிகமாகச் சலுகைகளையும் உரிமைகளையும் வழங்கும்
சட்டங்கள் ஆக்கப் பெற்றன. பலவிதமான  வரிகள் போடப்பட்டு மக்களின்
இரத்தமும்    உயிரும்     உறிஞ்சப்பட்டன.   பஞ்சமும்  கொடுமையான
நோய்களும்   உள்நாட்டுக்    குழப்பங்களும்   இந்நாட்டையே  தங்களது
நிரந்தரக் குடியிருப்பாகக் கொண்டுவிட்டன.
 

     “இத்தகைய  மனிதத்  தன்மையற்ற கொடிய நடவடிக்கைகளெல்லாம்
சேர்ந்து  ஆட்சி  பொறுப்பின் கொடுமையையும்  அது மாறவேண்டியதன்
அவசியத்தையும்  மக்கள்   உணரும்  படிச்செய்தன.  மக்கள்   அவ்வித
உணர்ச்சி பெறுவது இயல்பேயாகும்.

     “பெரிய ஞானியான திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்,

     கொலைமேற் கொண்டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
     அல்லவை செய்தொழுகும் வேந்து
     வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
     கோலொடு நின்றான் இரவு

     என்பதாக, அநியாயத்தை அகற்றிவிட்டு, தருமத்தை அதன் இடத்தில்
நிலைநிறுத்தவே நேர்மையாளன் ஒவ்வொருவனும் பாடுபடுவான்.அவ்வாறே
இந்திய   நாட்டினரும்   அந்நிய   ஆட்சியை   அகற்றிவிட்டுத்  தங்கள்
சுயராஜ்யத்தை  அமைப்பதற்காக  இப்பொழுது   உழைத்து வருகிறார்கள்.

     சிவனாரின்  இந்த  வாக்குமூலத்தைக் கேட்ட பின்னர், அவருக்குப்
பத்தாண்டு  கடுங்காவல்  தண்டனை  விதித்தார் வெள்ளையரான நீதிபதி
பின்ஹே.

     சிறைச்சாலைக்குள்ளேயும்    வளர்ந்த  பெருமை தமிழ் மொழிக்கு
உண்டு.  “நக்கீரர்  பெருமான்,  ஒரு   பூதத்தால்  மலைக்    குகையில்


1. ‘ஞானபாநு’ நவம்பர். 1915.