பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 91

இல்லாத  ஒரு  பிறவி  நொண்டி  அவரைக்  கண்டு  பிச்சை கேட்க, அவர்,
“Silver  and  Gold have I none,  but  such as I have give I thee”
என்று  அவனைக்  கையைப்  பிடித்துத்  தூக்கிவிட,  அவனுக்கு  இரண்டு
கால்களும் யாவருக்கும்மிருப்பதுபோல் வளர,அவன் பரம சந்தோஷமடைந்து
குதித்துக்கொண்டு   சென்றான்   என்று   கிறிஸ்துவ   வேத  புஸ்தகத்தில்
கூறப்பட்டிருக்கின்றது.   அதே   மாதிரியாக  எனது   மனைவி  என்னைச்
சிறைச்சாலையில்   கண்டு  பேசிய  காலத்தில்,  தான் ஏழ்மைத்தனத்தினால்
மிகக் கஷ்டப்படுவதனால் தனது  கஷ்ட நிவர்த்திக்கு  ஓர் உபாயம் செய்து
கொடுக்க  வேண்டுமென்று  கேட்டுக்கொள்ள,  நானும், “Silvar and gold
have   I none, but such as I have  give I thee” என்று கூறி, எனது
சற்குருமுகத்தினின்றும்  கேட்டு, அறிந்து, அனுபவித்தவைகளை ஒரு புஸ்தக
ரூபமாய் எழுதி  அவளது  துக்க நிவர்த்தியின்  பொருட்டு அளிக்கின்றேன்.

     “எனது  அவகாச  சமயங்களில்  எழுதி  இப்புஸ்தகத்தை முடித்துக்
கொடுக்கும்படி எனக்கு அனுமதி கொடுத்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் துரை
அவர்களுக்கும்  இவ்விடத்திய  தற்கால  சூப்பரின்டெண்டெண்ட்  துரை
அவர்களுக்கும் யான் வந்தனமளிக்கின்றேன்.”

மத்திய சிறைச்சாலை
சேலம்
15-3-1911                                   சுப்பிரமணிய சிவம்.

     இரண்டாவது  முறையாக  சிவா  சிறைப்பட்டபோது,  அந்த நூலின்
மூன்றாவது  பதிப்பினைச்  சரிபார்த்து  வெளியிட்டார்.  அந்தப் பதிப்பின்
முன்னுரை வருமாறு:
“மகா சக்தியின் அருளால்  இந்நூல் மூன்றாவது பதிப்பினை அடைவதற்கு
மகிழ்கின்றேன்.  எனது  தேசபக்தி  காரணமாக இரண்டாம் முறை மதுரை
ஜில்லா   நியாயாதிபதியினால்   2  வருஷம்  கடுங்காவலும்  500  ரூபா
அபராதமும்  விதிக்கப்பெற்று  திருச்சிராப்பள்ளி  சிறையில் அடைபட்டுக்
கிடந்து  இப்பொழுது  இம்மாதம் 12ந் தேதியன்று விடுதலையடைந்து சரீர
சௌக்கியமில்லாமல்   படுத்த   படுக்கையிலிருப்பதால்,   இன்னும்  பல
விஷயங்களையும்   சேர்த்து   இந்நூலை   இன்னும்   பெரிது   பண்ண