பக்கம் எண் :

92விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

வேண்டுமென்றிருந்த  எனது  எண்ணம்  நிறைவேறாததற்கு  வருந்துகிறேன்.
இந்நூல்    ஸ்வாநுபுதியில்   எழுதப்பட்டதென்பது,    படிக்கும்  வேதாந்த
வித்தியார்த்தி   அனைவருக்கும்  தெரியும்.  சிறைச்சாலையிலேயே  தனியே
அடைக்கப்பட்டிருந்த  பொழுது  அந்த  ஏகாந்தவாசத்தில் மனத்தில் எழுந்த
இன்பகரமான   உணர்ச்சிகளே   இப்புஸ்தகத்திலுள்ள   விஷயங்கள்.  தவிர,
இவை  எனது   குருமுகமாக  நான்  சிரவணம்  செய்தவையாம்.   இந்நூல்
உலகிலுள்ள    பலருக்கும்   பயன்பட்டு,   எல்லோரும்    இன்பநிலையை
எய்துவதற்கு உதவியாயிருக்குமாறு மகாசக்தி அருள்புரிக.

கும்பகோணம்
21-1-22                                     சுப்பிரமணிய சிவம்.

     அன்னியரின் அடக்குமுறைக் கொடுமைகளால் தமக்குற்ற துன்பங்களை
மறக்க,   சிறையில்   தமிழ்ப்பணியிலீடுபட்ட   சிவனார்,   அதையே  தமது
மனைவியின் வறுமைப்பிணி போக்கும் உபாயமாகவும் பயன்படுத்தினார்.
 

     தம்முடைய மனைவியாரின் வறுமையைக் குறைக்கும் பொருட்டு, தியாகி
சிவா   ‘சச்சிதானந்த சிவம்’  என்ற   தத்துவ  நூலை  இயற்றினாரென்றால்,
அந்நூலை   வெளியிட்டு   அவ்வம்மையார்   பெற்ற   பணம்  சில  பத்து
ரூபாய்களுக்கு அதிகமாக இருக்க முடியாது.  அந்நாளில், தமிழிலே வேதாந்த
நூல்    எழுதினால்   வாங்குவார்  யார்?   சிவனாருடைய   தியாகத்திற்கு
மதிப்பளிக்கக் கருதி அவர் மனைவியார்பால் இரக்கம் காட்டி- யாரோ  சிலர்
அவரது நூலை வாங்கியிருக்கலாம்.

     விடுதலைப்போர்   நடந்த   காலத்தில்,   தீவிர   தேசபக்தர்களுக்கு
வாழ்க்கைப்பட்ட பாவத்திற்காகப் பசியோடும் பிணியோடும் போராடி அகால
மரணமடைந்த  பத்தினிப்  பெண்கள்  பல்லாயிரவராவர். விடுதலை  பெற்ற
பாரதமே! அந்த மாபெரும் பத்தினியர்களுக்கு நீ செய்யப்போகும் கைம்மாறு
என்னவோ?

வேதாந்த நூற்கள்

     தியாகி    சுப்பிரமணிய   சிவம்,   1908   முதல்  1922  வரையுள்ள
காலகட்டத்தில்   நான்குமுறை   சிறைத்தண்டனை    பெற்று,    பல்வேறு