பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 95

மொழியிலும்   ஓரளவு   பயிற்சி   பெற்றிருந்தார்.   ஆயினும்,   தம் தாய்
மொழியான    தமிழுக்குரிய    இடங்களில்   சம்ஸ்கிருதமும்   ஆங்கிலமும்
ஆதிக்கம்    செலுத்துவதனை   அவர்   விரும்பாதவரானார்.   அந்த  இரு
மொழிகளின்      ஆதிக்கங்களிலிருந்தும்     தமிழ்மொழிக்கு     விடுதலை
தேடவும் அவர் பாடுபட்டார்.

தனித் தமிழ்ப்பற்று!

     அவர்    காலத்தில்     தமிழ்மொழியில்    இலக்கண -   இலக்கியப்
பயிற்சியுடைய   புலவர்களும்    வடமொழிச்    சொற்களை   மிகுதியாகக்
கலந்தே    எழுதினர்.    அப்படி   எழுதுவதனைத்   தனித்திறமையாகவும்
கருதினர்.    தியாகி    சிவனாரும்     வடமொழிச்    சொற்கள்    கலந்த
மணிப்பிரவாளமாகவே      எழுதினார்.    ஆயினும்,    அது    ஒருகுறை
யென்பதனை     உணர்ந்து,   தமது    தாய்மொழியின்  தனித்தன்மையைக்
காக்கமுயன்றார்.

      தாம்   நடத்திய   ‘ஞானபாநு’   மாத   இதழில்   ஒரு  விளம்பரம்’
வெளியிட்டார். அது வருமாறு:

ஐந்து ரூபாய்!

      ‘உங்களால்      தனித்தமிழ்     எழுதமுடியுமா?      முடியுமானால்
முந்துங்கள்,   சம்ஸ்கிருதம்   முதலிய    அந்நிய   பாஷைச்   சொற்களில்
ஒன்றும்    கலவாது    தனித்தமிழில்    நமது   ‘ஞானபாநு’வில்   எட்டுப்
பக்கத்திற்குக்     குறையாது     வரும்     படியாகத்    தமிழ்ப்பாஷையின்
சிறப்பைப்   பற்றியாவது     திருவள்ளுவ     நாயனாரின்    சரித்திரத்தை
யாவது    எழுதுவோருக்கு     ரூபா    ஐந்து    இனாமளிப்பதாகத்தமிழபி
மானியொருவர்  முன் வந்திருக்கிறார்.

      சம்ஸ்கிருதச்    சொல்லாகிய    கஜம்    திரிந்து   தமிழில்    கயம்
என்றாயிருப்பது        போன்ற       திரிபுச்சொற்களும்       உபயோகப்
படுத்தலாகாது.     சுருக்கத்தில்,     எந்தப் பாஷையின்     சொற்களுக்கும்
சம்பந்தமில்லாத       தனித்தமிழ்ச்     சொற்களே      உபயோகிக்கப்பட
வேண்டும்.

     வியாசங்கள்      வருகிற      ஆவணி    15ம்  தேதிக்குள்   நமது
“ஞானபாநு”   கார்யஸ்தலத்திற்கு     அனுப்பிக்   கொடுக்கப்பட   வேண்டு
மென்று     தெரிவிக்கப்படுகிறது.     வெகுமதிப்புக்குரித்தாகிய      வியாச
மானது   நமது   பத்திரிக்கையில்     பிரசுரிக்கப்படும்.    இவ்விஷயத்தைப்