கட்டுரைகள் தமிழ்மொழியின் பெருமை - திருவள்ளுவரின் வரலாறு
பற்றியவையாக இருக்க வேண்டுமென்று சிவம் அறிவித்தார். ‘சுதேசமித்திரனு’டன் போர்!
தமிழ் மொழியின் வளர்ச்சி கருதும் இந்த விளம்பரத்தை வெளியிடுமாறு
அந்நாளில் வெளிவந்து கொண்டிருந்த ‘ இந்து நேசன் ’ நாளிதழுக்கும்,
‘ சுதேசமித்திரன்’ நாளிதழுக்கும் சுப்பிரமணிய சிவம் அனுப்பி வைத்தார்.
ஆனால், அந்த இதழ்கள் சிவம் அனுப்பிய விளம்பரத்தை வெளியிடவில்லை.
விடுவாரா, சிவம்! அவர் எதற்கும் யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரம் பெற்ற
வரன்றோ! தமது விளம்பரத்தை வெளியிட மறுத்த இதழ்களைத் தாக்கி
எழுதினார். அது வருமாறு:
“...நாம் இவ்விஷயத்தைக் குறித்து விளம்பரங்கள் பிரசுரிக்கும்படி பல
பத்திரிக்கைகளுக்கும் எழுதிக் கேட்டுக்கொண்டோம். நமது வேண்டுகோட்
கிணங்கிச் சில பத்திரிக்கைகள் பிரசுரித்தன. ஆனால், நமது சென்னையில்
நடைபெறும் இரண்டு தினசரிப் பத்திரிக்கைகளும் இவ்விளம்பரத்தைப்
பிரசுரிக்க மறுத்துவிட்டன.
“இந்துநேசன் பத்திரிகை ‘நிருபநேயர்கட்கு அறிக்கை’ என்னும் தலைப்
பெயரின் கீழ் வேறு சிலர் எழுதிய வியாசங்களையும் நமது விளம்பரத்தையும்
சேர்த்து” ஆகிய இந்நிருபங்களெல்லாம் வந்தனத்துடன் மறுதளிக்கப்பட்டது.
(ப-ர்)” என்று கம்பீரமாகப் பிரசுரித்துவிட்டது.
“பன்மை எழுவாய்க்குப் பயனிலை ஒருமையாகப் பிரசுரிக்கப்
படித்திருக்கும் பத்திரிக்கை நமது நாட்டில் அறிவின்மையையே விருத்தி
செய்யும் என்பதில் சந்தேகம் என்ன? அந்நியச் சொற்களைக்
கேட்பாரில்லாமல் பிரயோகித்துத் தமிழிலக்கியத்தையும் ஒருமை பன்மை
கூடத் தெரியாது கண்டவாறெல்லாம் எழுதித் தமிழிலக்கணத்தையும்
சித்திரவதை செய்கின்ற “இந்து நேசன்” எங்ஙனம் நமது விளம்பரத்தைப்
பிரசுரம் செய்யும்?
“சுதேசமித்திரனோ ஐரோப்பிய நடையைப் பின்பற்றி
யுலாவும் பத்திரிக்கையன்றோ? தனித்தமிழ் எழுதினாலும்
சரியே, கலப்புத் தமிழ் எழுதினாலும் சரியே. அதற்கு