பக்கம் எண் :

98விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

வேண்டியது  பணம்தான்  போலும்! நமது  விளம்பரத்ததைப்  பிரசுரிப்பதற்கு
மாதத்திற்கு   இத்தனை   ரூபா  கொடுத்தால்தான்   முடியுமென்று   நமக்கு
“சுதேசமித்திரன்” பத்திராதிபர் எழுதிவிட்டார்.

     “ஹிஸ்  எக்ஸெல்லென்ஸி  கவர்னர்,”  “யுவர் மெஜஸ்டிக் ஒபிடியண்டு
ஸெர்வண்டு”  என்ற  வார்த்தைகளெல்லாம்  சுதேசமித்திரனில்   பிரசுரிக்கப்
படுகின்றன. தமிழ் ஜனங்களுக்குள் ‘சுதேசமித்திரன்’ அறிவைப் பரப்புகின்றதா?
அல்லது ஆங்கில பாஷையைப் பரப்புகின்றதா?

      “இந்த  இரண்டு  பத்திரிக்கைகளும்  அழகிய  பெயர்களை யுடைத்தா
யிருந்தும்   அப்பெயர்கட்கொவ்வும்   செயல்களைச்   செய்யாமை   மிகவும்
விசனிக்கத்தக்கது. ஸ்வய பாஷையை ஆதரியாத பத்திரிகைகள் ஸ்வதேசத்தை
எங்ஙனம் முன்னேற்றத்திற்குக் கொண்டுவரப் போகின்றனவோ தெரியவில்லை.
ஆனால்,நம்மவர்கட்கும் இவ்விரண்டும் பத்திரிகையைத் தவிர வேறு தினசரிப்
பத்திரிகைகள் இல்லையே! தட்டிச் சொல்ல ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்
பிரசண்டன் தானே!”

வ.உ.சி.-யின் துணை

     ‘ஞானபாநு’ வுக்கும் ‘சுதேசமித்திரனுக்கும்  கருத்துப்போர் தொடர்ந்தது.
அதில் ‘சுதேசமித்திரனின் கலப்புத் தமிழ்க் கட்சிக்கு எதிராக ‘ஞானபாநு’வின்
தனித் தமிழ்க்கட்சியை ஆதரித்து , கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்,
“பாரதி”  என்ற  மாத  இதழில் கட்டுரை  எழுதினார்.  கருத்துப்போர்  பல
மாதங்கள்  நீடித்தபோது,  எல்லாப்  பத்திரிகைகளிலுமே  அறிக்கைவிட்டார்
வ.உ.சி.  ‘ஞானபாநு’வுக்கு  மாற்றுப்  பிரதியாக “சுதேசமித்திரன்” அனுப்பப்
படுவதும் நிறுத்தப்படுமளவுக்கு இந்த இரண்டு பத்திரிகைகளுக்கிடையே பூசல்
வளர்ந்தது. பரலி.சு.நெல்லையப்பர் நடத்திய “லோகோபகாரி” இதழும் இந்தக்
கருத்துப் போரில் “ஞானபாநு”வின் சார்பில் பங்குகொண்டது.

     “ஞானபாநு”வில் “சுதேசமித்திரனுக்”குப் பதிலளித்து சிவாவால் எழுதப்
பட்ட ஒரு குறிப்பு வருமாறு:

     “இப்பொழுது      ஜனசமூகம்      விழித்துக்கொண்டு     விட்டது.
தேசாபிமானமும்   பாஷாபிமானமும்  எங்கும்   பெருகி       வருகின்றன.