நமது தேசம், நமது பாஷை என்ற எண்ணம் எங்கும் உண்டாயிருக்கின்றது. ஆதலால், “சுதேசமித்திர’ னுடைய நடையும் தன்மையும் இப்பொழுது நல்வழியில் சீர்திருத்தப்படவேண்டும். அப்படிச் செய்யாமல், “முயலுக்கு மூன்றேகால்” என்ற பழமொழிப்படி ஒரு பிடிவாதமாக, “சுதேசமித்திரன்” தன்னுடைய பிறபாஷா நடையையும் தன்மையையுமே அனுசரித்து வருமானால், அது செய்யவேண்டிய வேலை செய்து முடித்தாய் விட்டதென்றும் இனிமேல் அதற்கு நமது தமிழ்நாட்டில் வேலையில்லையென்றும் நாம் விசனத்துடன் வெளியிட வேண்டியிருக்கின்றது.”1 கட்சிக்கட்டுப்பாட்டை விடவும் கன்னித் தமிழ்மொழியின் வளர்ச்சியையே பெரிதாகக் கருதினர். அந்நாளைய தேசபக்தர்கள் மிகச்சிறந்த தேசபக்தராக விளங்கிய திரு.எல்.எஸ்.சுப்புராய ஐயர் அவர்கள் சிவாவின் ‘தனித்தமிழ்’ முயற்சிக்கு ஆதரவளித்து அவரது ‘ஞானபாநு’வில் சிறப்புக் கட்டுரை எழுதினார். அதன் சுவைமிக்க பகுதி வருமாறு: “ஆதியிலிருந்தே பூர்வீக ஆசிரியர்களுடைய சகவாகத்துக்கு வந்தது முதலே தமிழுக்கு சம்ஸ்கிருதம் முதல் சத்துருவாயிற்று. அது ‘வேத பாஷை’- தெய்வ பாஷை’ என்று பூஜிக்கப்பட்டதால், தமிழர்களால் ஆவலோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிறகு, “நவாபு தர்பாரில்” இராஜபக்திக்காகவும், பயத்துக்காகவும் இந்துஸ்தானியும் தடையிலாது ஏற்று வழங்கப்பட்டது. “தற்காலம் இராஜாங்க பாஷையாகிய ஆங்கிலமோ, ஏகசக்ராதிபத்யம் பூண்டு மற்ற எல்லா பாஷைகளையும் ஆளுங்கால், அதன் சொந்தக்காரரைக் கப்பம் செலுத்திக் கைகட்டி தூர நின்று மரியாதை செய்ய ஏவி, எங்கும் செல்லுகிறது.” “இவ்விதம் மீறியுள்ள அந்நிய சத்துருக்களால் தாக்கப் பட்டும் போதாமல், உட்கலகக்காரர்களாகிய தெலுங்கு, கன்னடம் முதலியவைகளால் பாதிக்கப்பட்டும் குல ஸ்தீரீயான தமிழ்மாது பொறுமையோடு அடங்கி நிற்கிறாள். ஆனால், இந்தப் பொறுமை, 1.’ஞானபாநு’ நவம்பர் 1915. |