பக்கம் எண் :

யான் பெற்ற நல்லுரை 235

போகவேண்டும். கும்பகோணத்தில் வித்துவான் தியாகராச
செட்டியாரைப் பார்த்துவிட்டுச் செல்லவேண்டுமென்பது பிள்ளையவர்களின்
கருத்து.

தியாகராச செட்டியார்

தியாகராச செட்டியாருடைய பெருமையை நான் பல நாட்களுக்கு
முன்பிருந்தே கேள்வியுற்றவன். கும்பகோணம் காலேஜில் தலைமைத்
தமிழாசிரியராக இருந்த அவர் சிறந்த படிப்பாளி என்றும், அவரிடம் படித்த
மாணாக்கர்கள் எல்லோரும் சிறந்த தமிழறிவுடையவர்கள் என்றும் சொல்லிக்
கொள்வார்கள். காலேஜில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு எவ்வளவு கௌரவம்
இருந்ததோ அவ்வளவு கௌரவம் அவருக்கு உண்டு.

பிள்ளையவர்களிடம் படிக்க வந்த பிறகு செட்டியாரைப் பற்றிய பேச்சு
இடையிடையே நிகழும். அவர்களோடு பழகுபவர்களும் செட்டியாரது அறிவு
வன்மையைப் பாராட்டிப் பேசுவதை நான் பலமுறை கேட்டிருப்பதுண்டு.
ஆதலால், செட்டியாரைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று என் ஆசிரியர்
எண்ணியது எனக்கு மிக்க சந்தோஷத்தை உண்டாக்கிற்று. இடைவழியில், நான்
அவரிடம் படிக்கச் செல்வதாக முன்பு எண்ணியிருந்தேனென்பதையும்,
அவரைப் பார்க்கும் விருப்பம் எனக்கு அதிகமாக உண்டு என்பதையும்
பிள்ளையவர்களிடம் தெரிவித்தேன்.

கும்பகோணம் வந்ததும் நேரே செட்டியார் வீட்டிற்கு வண்டி சென்றது.
செட்டியார் சக்கரபாணிப் பெருமாள் கோயிலின் தெற்கு வீதியிலுள்ள ஒரு
வீட்டில் குடியிருந்தார். நாங்கள் போன போது அவர் வீட்டில் இல்லை.
ஆதலின் அவ்வீட்டுத் திண்ணையில் நாங்கள் இருந்தோம்.

எங்கள் வரவை அறிந்த செட்டியாருடைய மாணாக்கர் ஒருவர்,
விரைவில், வெளியே சென்று அவரை அழைத்து வந்தார். அவர், “ஏன் இங்கே
உட்கார்ந்திருக்கிறீர்கள்? உள்ளேபோய் இருக்கக் கூடாதா? சாமான்களை
எல்லாம் இறக்கி உள்ளே வைக்கச் சொல்லக் கூடாதா?” என்று
கேட்டுக்கொண்டே வந்தார். வந்தவுடன் பிள்ளையவர்களை அவர்
சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

அவர் தோற்றம்

அவரைப் பார்த்தேன். பளபளவென்றிருந்தது அவர் தேகம். நல்ல
சிவப்பு; அதிக உயரமும் இல்லை; குட்டையும் இல்லை. நல்ல