பக்கம் எண் :

என் தந்தையார் குருகுலவாசம் 27

இவரிடம் என் தந்தையாரும் சிறிய தந்தையாரும் சங்கீத அப்பியாசம்
செய்தனர். அவ்விருவருக்கும் இவருடைய கீர்த்தனங்கள் பல பாடம் உண்டு.

அத்தியாயம்- 6

என் தந்தையார் குருகுல வாசம்

“எப்போதும் சிவபக்தி பண்ணிக் கொண்டிரு” என்பது என் தந்தையார்
எனக்குக் கடைசியில் கூறிய உபதேசம். அந்த உபதேசத்தை நான்
கடைப்பிடிப்பதனால் இந்த அளவில் தமிழ்த் தொண்டு புரியவும்
அன்பர்களுடைய ஆதரவைப் பெறவும் முடிந்ததென்று உறுதியாக
நம்பியிருக்கிறேன். அவர் என் விஷயமாக உள்ளத்தே கொண்டிருந்த
கவலையை நான் முதலில் அறிந்து கொள்ளாவிட்டாலும் நாளடைவில்
உணர்ந்து உருகலானேன். அவரிடம் எனக்கு இருந்த பயபக்தி வரவர
அதிகரித்ததே யொழியக் குறையவில்லை.

இளமையில் எனக்கு ஒரு தக்க ஆசிரியரைத் தேடித் தந்ததும், பின்பு
தமிழ்ச் சுவடிகளே கதியாகக் கிடந்த எனக்கு லௌகிகத்தொல்லை
அணுவளவேனும் இல்லாமற் பாதுகாத்ததும், சிவபக்தியின் மகிமையைத்
தம்முடைய நடையினால் வெளிப்படுத்தியதுமாகிய அரிய செயல்களை நான்
மறக்கவே முடியாது. அவருடைய ஆசார சீலமும், சிவ பூஜையும், பரிசுத்தமும்,
சங்கீதத் திறமையும் அவரைத் தெய்வமாக எண்ணும்படி செய்தன. அவருக்கு
என்பாலுள்ள வாத்ஸல்யம் வெளிப்படையாகத் தோற்றாது. அவரது உள்ளமாகிய
குகையிலே அது பொன்போற் பொதியப்பட்டிருந்தது. அதன் ஒளியைச் சில
முக்கியமான சந்தர்ப்பங்களில் நான் அறிந்திருக்கிறேன்.

என் தந்தையாருடைய இயல்பான பெயர் வேங்கட சுப்ரமணிய
ஐயரென்பது; வேங்கடசுப்பையரென்றே அது மருவி விட்டது. அவரது பெயர்
முன்னோர்களின் பெயரானமையின் வீட்டிலுள்ளவர்கள் அதைக்
கூறமாட்டார்கள். அதனால் “ஸாமி” என்றே அவரை அழைத்து வந்தனர்.
என்னுடைய தந்தையாருக்கு இளைய சகோதரர் ஒருவர் இருந்தார். இவருக்கு
ஸ்ரீநிவாஸையரென்பது

கனம் கிருஷ்ணையருடைய சரித்திரத்தை 1936-ம் வருஷத்தில் தனியே
விரிவாக எழுதிக் கீர்த்தனங்களுடன் வெளியிட்டிருக்கிறேன்.