பக்கம் எண் :

நேட்டாலில் குடியேறினேன் 173

Untitled Document
அப்துல்லாவின் வீடு,   உடனே        ஒரு சத்திரமாகவும் பொதுக்
காரியாலயமாகவும்    மாறிவிட்டது.   எனக்கு   உதவிசெய்த படித்த
நண்பர்கள் பலரும், மற்றும்    பலரும், அங்கேதான் சாப்பிட்டார்கள்.
இவ்விதம் உதவி செய்த          ஒவ்வொருவருக்கும் பணச்செலவு
அதிகமாயிற்று.

     முடிவாக, மகஜரைச்  சமர்ப்பித்துவிட்டோம்.   எல்லோருக்கும்
அனுப்புவதற்கும்    வினியோகிப்பதற்குமாக  அம்மகஜரின் ஆயிரம்
பிரதிகளை    அச்சிட்டோம்.   நேட்டாலில்      இருந்த   தங்கள்
நிலைமையைப் பற்றி     இந்திய மக்கள் முதன் முதலாக அறியும்படி
இது செய்தது.     எனக்குத் தெரிந்த    எல்லா பத்திரிகைகளுக்கும்
பிரமுகர்களுக்கும் மகஜரின் பிரதிகளை அனுப்பினேன்.

     ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை,    இம்மகஜரைக் குறித்து
எழுதிய ஒரு தலையங்கத்தில் இந்தியரின் கோரிக்கையைப்  பலமாக
ஆதரித்தது.    இங்கிலாந்தில்   பல     கட்சிகளைச்     சேர்ந்த
பத்திரிகைகளுக்கும்     பிரமுகர்களுக்கும்     மகஜரின்   நகலை
அனுப்பினேன்.    ‘லண்டன் டைம்ஸ்’  பத்திரிகை எங்கள் கட்சியை
ஆதரித்தது.  மசோதா நிராகரிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையைக்
கொள்ளலானோம்.

     இச் சமயத்தில் நான்    நேட்டாலை விட்டுப்   போய்விடுவது
என்பது முடியாத காரியம் ஆகிவிட்டது.   இந்திய நண்பர்கள் நாலா
பக்கங்களிலும்    என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தனர்.  நிரந்தரமாக
அங்கே தங்கிவிடுமாறும் மன்றாடினர். எனக்கு  இருந்த கஷ்டங்களை
எடுத்துக் கூறினேன். பொதுஜனச் செலவில்  அங்கே தங்குவதில்லை
என்று     முடிவு  கட்டிக்கொண்டேன்.   தனியாக ஒரு ஜாகையை
அமர்த்திக் கொள்ள வேண்டியது  அவசியம் என்றும் எண்ணினேன்.
வீடு, நல்லதாக இருக்க வேண்டும்;அதோடு நல்ல இடத்திலும் இருக்க
வேண்டும் என்று நினைத்தேன். சாதாரணமாக     பாரிஸ்டர்களுக்கு
உரிய   அந்தஸ்தில் நான் வாழ்ந்தாலன்றி இந்திய சமூகத்திற்கு நான்
மதிப்பைத் தேடிக் கொடுத்தவன் ஆக முடியாது  என்ற  எண்ணமும்
எனக்கு இருந்தது. வருடத்திற்கு          300 பவுனுக்குக் குறைந்து
அத்தகைய குடித்தனத்தை நடத்துவது இயலாது    என்றும் எனக்குத்
தோன்றியது. ஆகவே,      குறைந்தபட்சம் அந்த அளவுக்குச் சட்ட
சம்பந்தமான வேலையை   எனக்குத் தருவதாக  இந்திய சமூகத்தைச்
சேர்ந்தவர்கள்    எனக்கு உத்தரவாதம் அளித்தால் மாத்திரமே நான்
அங்கே தங்க முடியும் என்று     முடிவு செய்தேன்.  இந்த முடிவை
அவர்களுக்கு அறிவித்தேன். “நீங்கள் செய்யும்  பொது வேலைக்காக
அத்தொகையை உங்களுக்குக் கொடுக்க வேண்டும்   என்றே நாங்கள்
விரும்புவோம். இதை நாங்கள்       எளிதாக வசூலித்துவிட முடியும்.
இதுவல்லாமல்