பக்கம் எண் :

280சத்திய சோதனை

Untitled Document
ஆகும். வேறு பல விஷயங்களிலும்           அவருக்குச் சிரத்தை
உண்டாகும்படி செய்யப் பலர் முயல்வார்கள்.    ஆனால், அவர்கள்
ஒவ்வொருவருக்கும் பின் வருமாறு ஒரே  பதிலேயே அவர் கூறுவார்:
“அக் காரியத்தை நீங்களே செய்யுங்கள்.     என் வேலையை நான்
செய்து கொண்டிருக்கிறேன்.         நான் விரும்புவதெல்லாம் நாடு
சுதந்திரமடைய          வேண்டும் என்பதே. இதில் வெற்றி பெற்று
விடுவோமானல் மற்றவைகளைப்பற்றி நான் சிந்திக்கலாம். இன்று என்
முழு நேரத்தையும் பக்தியையும் ஈடுபடுத்துவதற்கு     இந்த ஒன்றே
போதுமானது.”

     ரானடேயிடம் அவர் கொண்டிருந்த அபார பக்தியை ஒவ்வொரு
நிமிடமும் காணலாம்.         ஒவ்வொரு விஷயத்திலும் ரானடேயின்
கருத்துத்தான் இவருக்கு வேத வாக்காக        இருந்தது ஒவ்வொரு
கட்டத்திலும் ரானடேயின்        கருத்தை எடுத்துக்காட்டுவார். நான்
கோகலேயுடன் தங்கியிருந்தபோது,      ரானடேயின் சிரார்த்த தினம்
(அல்லது பிறந்த தினமா என்பது   எனக்கு நினைவு இல்லை) வந்தது.
கோகலே, இத்தினத்தைத் தவறாமல் அனுசரித்து வந்தார். அப்பொழுது
அவருடன் என்னைத் தவிர அவருடைய  நண்பர்களான பேராசிரியர்
கதாவடே, ஒரு சப்ஜட்ஜ்      ஆகியவர்களும் இருந்தனர். இத் தின
வைபவத்தில் கலந்து கொள்ள     எங்களைக் கோகலே அழைத்தார்.
அப்பொழுது அவர் பேசியபோது,        ரானடேயைப் பற்றிய தமது
நினைவுகளை எங்களுக்கு எடுத்துக் கூறினார்.    அச்சமயம் ரானடே,
திலாங், மண்டலிக் ஆகியவர்களை ஒப்பிட்டுச் சொன்னார். திலாங்கின்
அழகிய எழுத்து நடையைப் பாராட்டினார்.     சீர்திருத்தவாதி என்ற
வகையில் மண்டலிக்கின் பெருமையைச் சொன்னார்.     இவர், தமது
கட்சிக்காரர்களின் விஷயத்தில் எவ்வளவு    சிரத்தை காட்டி வந்தார்
என்பதற்கு ஓர் உதாரணத்தையும் குறிப்பிட்டார். அவர்,  வழக்கமாகப்
போக   வேண்டிய ரெயில் ஒரு நாள்         தவறிவிட்டதாம். தமது
கட்சிக்காரரின் நன்மையை முன்னிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில்   தாம்
கோர்ட்டில் இருக்க வேண்டும்   என்பதற்காக அவர் தனி ரெயிலுக்கு
ஏற்பாடு செய்துகொண்டு போய்ச் சேர்ந்தாராம். ஆனால்,    இவர்கள்
எல்லோரையும்விட ரானடே தலைசிறந்தவர் என்றும்,  எல்லாவற்றிலும்
சிறந்த மேதாவி என்றும் கோகலே சொன்னார். அவர் சிறந்த  நீதிபதி
என்பது மாத்திரம் அல்ல, அதேபோல்      சிறந்த சரித்திராசிரியரும்
பொருளாதார நிபுணரும்,      சீர்திருத்தகாரருமாவார் என்றார். அவர்
நீதிபதியாக இருந்தும்,          கொஞ்சமும் பயப்படாமல் காங்கிரஸ்
மகாநாட்டிற்குச் சென்றார். அவருடைய அறிவாற்றலில் எல்லோருக்கும்
நம்பிக்கை உண்டாகையால் அவர் கூறும் முடிவுகளை,    எல்லோரும்
எந்தவித ஆட்சேபமும் கூறாமல்