ஆட்சிபுரிந்த தேசிங்குராஜன் மொகலாயருக்குக் கப்பம்
கட்டாது
தன்னுரிமையுடன் செஞ்சியை ஆட்சி புரிய முற்பட்டார். இதனால் ஆர்க்காட்டு நவாப்
சாதத் உல்லாகான் ஒரு பெரிய படையை
அனுப்பிச் செஞ்சிக் கோட்டையைத் தாக்கினார். இப்போரில்
தேசிங்குராஜன் வீரமரணம் அடைந்தார். பின் செஞ்சி கர்நாடக
நவாப் ஆட்சியின்கீழ் மீண்டும் வந்தது. திருச்சியை
தலைநகராகக்
கொண்டு ஆட்சிபுரிந்த மதுரை நாயக்க அரசி மீனாட்சியின்
(1732-1736) ஆட்சிக் காலத்தில், மதுரை நாயக்க அரசில்
பதவிக்காக உள்நாட்டுப் போர்கள் ஏற்பட்டன.
இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆற்காட்டு நவாபாயிருந்த
தோஸ்த் அலியின் மருமகனான சந்தாசாகிப் திருச்சியிலிருந்த
மதுரை நாயக்க அரசி மீனாட்சியைத் தமது நயவஞ்சகத்தால்
பதவியிலிருந்து நீக்கி, கர்நாடகத்தின் முழுப் பகுதியையும்
மொகலாயரின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்தார் (1736).
ஆனால், கி.பி. 1740இல் மராட்டியர்கள் மீண்டும்
கர்நாடகத்தில்
படையெடுத்து மொகலாயர்களை வென்று தங்கள் ஆதிக்கத்தை
ஏற்படுத்தினர். பின் மொகலாயரின் தக்காண சுபேதாராக விளங்கிய
ஹைதராபாத் நிஜாம் அசப்ஷா தமது ஆட்சிக்குட்பட்ட
கர்நாடகத்தில் படையெடுத்து மராத்தியர்களை
வென்றார் (1743).
இதனால் கர்நாடகம், கர்நாடக நவாபின் ஆதிக்கத்தின் கீழ்
மீண்டும் வந்தது. கர்நாடகத்தின் புதிய நவாப்பாக வாலாஜா
மரபினைச் சேர்ந்த அன்வாருதீன் நியமிக்கப்பட்டார்.
ஆனால்
நவயத் மரபினைச் சேர்ந்த சந்தாசாகிபும்
ஆர்க்காட்டு நவாப்
பதவிக்குப் போட்டியிட்டார்.
தமிழ்நாட்டில்
ஆங்கிலேயர் ஆதிக்கம்
கி.பி. 1600இல் இங்கிலாந்து நாட்டை
எலிசபெத் அரசி ஆட்சி
புரிந்த காலத்தில் ஆங்கில வியாபாரிகள் ‘ஆங்கிலக்
கிழக்கிந்தியக
கம்பெனி’ என்ற வாணிப சங்கத்தைத் தோற்றுவித்து,
இந்தியாவுடன
வாணிபம் புரிந்து வந்தனர். அப்பொழுது இந்தியாவை
ஆண்ட
ஜஹாங்கீர் என்ற மொகலாய மன்னரிடம் சில
|