பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்9


மன்னர்களின் பரம்பரையைத் தோற்றுவித்தார். விஸ்வநாதரால
தோற்றுவிக்கப்பட்ட மதுரை நாயக்க அரசு கி.பி. 1736 வரை
நீடித்தது. மதுரை நாயக்க மன்னர்களில் புகழ் பெற்றவராகத்
திருமலை மன்னர்
(1623-1659) கருதப் படுகிறார். மதுரை நாயக்க
அரசைத் தவிர தஞ்சாவூர், செஞ்சி ஆகியவற்றிலும் நாயக்கர்களின்
ஆட்சிமுறை ஏற்பட்டது. தஞ்சை நாயக்க அரசைத் திம்மப்ப-செவப்ப
நாயக்கரும்,
செஞ்சி நாயக்க அரசை வையப்ப-கிருஸ்ணப்பரும்
தோற்றுவித்தனர். தஞ்சை நாயக்க அரசு கி.பி. 1530 முதல் 1676
வரை நிலைத்திருந்தது. தஞ்சை நாயக்க மன்னர்களில் சிறப்பு
மிக்கவர் இரகுநாதர் (1600-1634) ஆவார். சிவாஜி தலைமையில்
எழுந்த மராட்டியர்கள் 1676-77இல் தமிழ்நாட்டில் வேலூர், செஞ்சி
ஆகிய பகுதிகளைக் கைப்பற்றித் தமிழகத்தின் பகுதிகளில்
மராத்தியரின் ஆட்சியை ஏற்படுத்தினர். ஷாஜியின் பிறிதொரு
மகனும் சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரனுமாகிய எகோஜி
(வெங்காஜி) தஞ்சையில் முடி சூட்டி ஆளத் தொடங்கினார்.
தஞ்சையில் மராட்டியரின் ஆட்சி கி.பி. 1855 வரை நீடித்தது.

மொகலாயர் ஆட்சியில் தமிழகம்

மொகலாய மன்னர் ஒளரங்கசீப் (1658-1707) ஆட்சிக்
காலத்தில் சுல்பிகர்கான் என்ற தளபதியின் படையெடுப்பினால்
செஞ்சியை மராத்தியரிடமிருந்து மொகலாயர்கள் கைப்பற்றினர்.(1698).
மதுரை நாயக்க அரசி மங்கம்மாள் (1689-1706) மொகலாயர
படையெடுப்பிற்குப் பணிந்து கப்பம் கட்ட ஒப்புக் கொண்டார்.
சுல்பிகர்கான் கர்நாடகத்தில் மொகலாயர் வென்ற பகுதிகளுக்கு
நவாபாக நியமிக்கப்பட்டார். (சோழமண்டலக் கடற்கரைப் பகுதியும்
அதை அடுத்துள்ள நிலப்பகுதியும் கர்நாடகம் எனப்பட்டது.)
சுல்பிகர்கானைத் தொடர்ந்து ஆர்க்காட்டைத் தலைநகராகக்கொண்டு
கர்நாடக நவாபுகள் என்ற மொகலாயப் பிரதிநிதிகள் ஆட்சி
புரிந்தனர். நவாப் சாதத் உல்லாகான் தமது சுதந்தரத்தை
வெளியிட்டுக் கர்நாடகத்தை ஆட்சி புரிந்தார். மொகலாய
ஆட்சிக்குட்பட்டிருந்த செஞ்சியை