விஜயநகர மன்னர்கள் ஆட்சி
கி.பி. 1336இல் சங்கமரின் புதல்வர்களால் தோற்றுவிக்கப்பட்ட
விஜயநகர இந்து அரசு விரைவில் வலிமை பெற்று வளர்ந்தது.
விஜயநகர மன்னர் புக்கரின் மகனான குமாரகம்பணன் தென்னாட்டில
படையெடுத்துத் தொண்டை மண்டலப்பகுதியில் ஆட்சி புரிந்த
சம்புவராயர்களை வென்றார் (கி.பி. 1361). பின் திருவண்ணாமலையும்
கைப்பற்றப்பட்டது. குமாரகம்பணரின் 1371ஆம் வருடப்
படையெடுப்பினால் மதுரையில் நிலைபெற்றிருந்த மதுரை சுல்தானிய
ஆட்சி நீங்கியது. கி.பி. 1371 முதல் தமிழகத்தில் விஜயநகர அரசின்
ஆட்சி ஏற்பட்டது எனலாம். மதுரையில் சுல்தானிய அரசு
ஏற்பட்டதனால் வலுவிழந்த பாண்டிய மன்னர்கள் தென்பாண்டிய
நாட்டில் சிற்றரசர்களாக ஆட்சி புரிந்தனர். பிற்காலப் பாண்டிய
மன்னர்களில் சிலர் விஜய நகர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டு
வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கி.பி. 15ஆம் நூற்றாண்டில்
தென்பாண்டி நாட்டில் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்
(1422-1463) தென்காசியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி
புரிந்தார். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சி
தென்பாண்டி நாட்டில் வலுவிழந்தது. சங்க காலத்திற்கும் முன்பாகத்
தமிழகத்தின் தென்பகுதியில் ஆட்சி புரியத் தொடங்கிய பாண்டிய
மன்னர்களின் ஆட்சி கி.பி. 17ஆம் நூற்றாண்டில் முற்றிலும் மறைந்தது.
சோழப் பேரரசும் பாண்டியப் பேரரசும் வீழ்ச்சியடைந்த
நிலையில் தமிழகம் முழுவதும் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு
உட்பட்டது. நாயக்க மன்னர்களின் ஆட்சி
விஜயநகரப் பேரரசர்
கிருஷ்ணதேவராயர் (1509-1529)
நாகம நாயக்கர் என்ற தளபதியைத் தமது பிரதிநிதியாக மதுரைப்
பகுதிக்கு அனுப்பி வைத்தார். நாகம நாயக்கரை அடுத்து விஸ்வநாத
நாயக்கர் விஜயநகர அரசின் மதுரைப் பிரதிநிதியாக
நியமிக்கப்பட்டார்.
விஸ்வநாதர் மதுரையில் நாயக்க
|